புதிய மூன்று செனட்டர்கள் பதவி ஏற்றனர்!

கோலாலம்பூர்:

இன்று, டேவான் நெகாராவின் தலைவர் டத்தோ அவாங் பெமீ அவாங் அலி பாசா (Datuk Awang Bemee Awang Ali Basah) முன்னிலையில், மூன்று புதிய செனட்டர்கள் பதவியேற்றுக்கொண்டனர்.

இளைஞர் ஆர்வலரும் பிகேஆர் (PKR) ரெம்பாவ் தலைவருமான டாக்டர் ஜூஃபிட்ரி ஜோஹா (Dr Jufitri Joha)

DAP மத்திய செயற்குழு உறுப்பினர் டத்தோ வு ஹிம் வென் (Datuk Wu Him Ven)

மேலும் அனுபவம் வாய்ந்த DAP தலைவர் டத்தோ லியோங் ங்கா ங்கா (Datuk Leong Ngah Ngah) ஆகியோர் செனட்டர்களாக பதவி ஏற்று கொண்டனர்.

டாக்டர் ஜூஃபிட்ரியும் டத்தோ வுவும், நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத்தால், மூன்று ஆண்டு காலத்திற்கு நியமிக்கப்பட்டனர். டத்தோ லியோங், 2028 வரை மாமன்னரால் நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய செனட்டர்களுக்கு வாழ்த்து தெரிவித்த அவாங் பெமீ, மேலவை தனிப்பட்ட, அரசியல் செல்வாக்கிலிருந்து விடுபட்டு, அதிகாரப் பிரிவினைக்கு இணங்க, மிக உயர்ந்த சட்ட அமைப்பாகச் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

பதவியேற்பு விழாவுக்குப் பிறகு, புதிய செனட்டர்கள், மக்களின் தேவைகள் பிரதிநிதித்துவப்படுத்தப்படுவதை உறுதி செய்ய, முக்கியப் பிரச்சினைகளை எழுப்புவதாகவும், ஜனநாயகத்தைப் பாதுகாப்பதாகவும் உறுதி அளித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here