கோலாலம்பூர்:
ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜ், அனிருத் கூட்டணியில் உருவான ‘கூலி’ திரைப்படம், உலகளவில் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, இப்படம் வெளியான 4 நாட்களில், RM404 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது. இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.
இந்நிலையில், நடிகை சிம்ரன், நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்துள்ளார். அப்போது எடுக்கப்பட்டப் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இந்தச் சந்திப்பு குறித்துச் சிம்ரன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், “சில சந்திப்புகள் காலம் கடந்தது.
சூப்பர் ஸ்டாரை சந்தித்தது மிகப்பெரிய மகிழ்ச்சி. ‘கூலி’ மற்றும் எனது நடிப்பில் வெளியான ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ ஆகியப் படங்களின் வெற்றி, இந்தச் சந்திப்பை மேலும் சிறப்பாக்கியது” என்று குறிப்பிட்டுள்ளார்.





















