மூத்த DBKL அதிகாரியும் 2 ஒப்பந்ததாரர்களும் எம்ஏசிசியால் கைது

கோலாலம்பூர் மாநகர மன்றத்தில் (DBKL) உயர் நிர்வாகத்தில் உள்ள ஒருவரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC)  கைது செய்துள்ளது. இந்த கைது தகவல் தொழில்நுட்பம் தொடர்பான திட்டத்தில் கொள்முதல் சம்பந்தப்பட்டதாக நம்பப்படுகிறது என்று பெரித்தா ஹரியான் தெரிவித்தது.

புத்ராஜெயாவில் உள்ள MACC தலைமையகத்தில்  வாக்குமூலம் அளிக்க வந்தபோது மூத்த அதிகாரி கைது செய்யப்பட்டார். அதிகாரியைத் தவிர, பொதுமக்களில் இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இந்த திட்டத்திற்கான ஒப்பந்ததாரர்கள் என்று நம்பப்படுகிறது. MACC மூவரையும் இன்று புத்ராஜெயா நீதிமன்றத்திற்கு காவலில் வைக்க உத்தரவிடுவதற்காக அழைத்து வரும் என்று தெரிகிறது. MACC வட்டாரம் கைதுகளை உறுதிப்படுத்தியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here