செகாமட்டில் மீண்டும் ஒரு நிலநடுக்கம்

ஜோகூர் செகாமட்டில் இன்று காலை 3.2 ரிக்டர் அளவிலான பலவீனமான நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ஒரு வாரத்திற்குள் இரண்டாவது முறையாக நடந்த நிலநடுக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. செகாமட்டில் இருந்து சுமார் 18 கி.மீ தெற்கே 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) தெரிவித்துள்ளது. ஜோகூர் மற்றும் தெற்கு பஹாங்கில் நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும், நிலைமையை தொடர்ந்து கண்காணிக்கும் என்றும் மெட்மலேசியா தெரிவித்துள்ளது.

செகாமட் உள்ளிட்ட  பல பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இரண்டு நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன. ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவான முதல் நிலநடுக்கம் காலை 6.13 மணிக்கு செகாமட்டைத் தாக்கியது. காலை 9 மணியளவில் குளுவாங்கில் 2.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. ஜோகூர், நெகிரி செம்பிலான், மலாக்கா, பஹாங்கின் பல பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here