மனைவியைக் கத்தியால் குத்திய கணவர்: தம்பதியினர் பினாங்கு மருத்துவமனையில் அனுமதி!

கோலாலம்பூர்:

சுங்கை ஆரா, தாமான் துனாஸ் மூடா பகுதியில் (Taman Tunas Muda, Sungai Ara) உள்ள தங்கள் வீட்டில், 28 வயது மனைவி, அவரது கணவரால் கழுத்தில் வெட்டப்பட்டுக் காயமடைந்தார். பிறகு, அவரது தாயார் தலையிட்டு அவரைக் காப்பாற்றினார்.

இந்தச் சம்பவத்தில், 30 வயது கணவர், அதே கத்தியால் தனது கழுத்து, கையை வெட்டிக்கொண்டதால், ஆபத்தான நிலையில் உள்ளார்.

காவல்துறையினரின் கூற்றுப்படி, இந்தத் தம்பதியினர், பினாங்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மனைவி ஆபத்தான நிலையில் இல்லை என்றும், கணவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார் என்றும் பினாங்கு தென்மேற்கு மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி சசாலி ஆடாம் (ACP Sazalee Adam) தெரிவித்தார்.

ஆறு வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்ட இந்தத் தம்பதியினருக்கு ஒரு பெண் குழந்தை உண்டு. மேலும், இருவருமே ஆசிரியர்கள் ஆவர். அவர்களுக்கு இடையே எந்தவிதமான குடும்பப் பிரச்சினையோ, நிதி நெருக்கடியோ அல்லது உடல்நலப் பிரச்சினையோ இருந்ததாகத் தெரியவில்லை.

இந்த வழக்கு, கொலை முயற்சி குற்றச்சாட்டின்கீழ், பிரிவு 307-இன் கீழ் விசாரிக்கப்படுகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here