துவாரான்:
தேசிய தின பொதுவிடுமுறையையொட்டி குடும்பமாக சுற்றுலா சென்றவர்களது மகிழ்ச்சி சோகத்தில் முடிந்தது. சபந்தார் கடற்கரையில் நீச்சலடித்துக் கொண்டிருந்த 15 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தான்.
“பாதிக்கப்பட்டவர் காணாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்ட இடத்திலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் தேடல் மற்றும் மீட்பு (SAR) நடவடிக்கையின் போது பொதுமக்களின் உதவியுடன், அந்த சிறுவனின் உடல் மாலை 7.05 மணிக்கு கரையோரத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. சுகாதார அமைச்சக மருத்துவ அதிகாரி ஒருவர் அவரை இறந்ததாக உறுதிப்படுத்திய பின்னர், அவரது உடல் மேலதிக நடவடிக்கைக்காக காவல்துறைக்கு ஒப்படைக்கப்பட்டது,” என்று, துவாரான் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை (BBP) தலைவர் முகமட் நோர் அமித் தெரிவித்தார்.
மாலை 5.23 மணிக்கு இளைஞன் காணாமல் போனதாக அவசர அழைப்பு வந்ததைத் தொடர்ந்து SAR நடவடிக்கை தொடங்கப்பட்டது. இதில் கோத்தா கினாபாலு நீர் மீட்புக் குழு (PPDA), ஆறு வாகனங்கள், ஒரு படகு, அவசர மருத்துவ மீட்பு சேவை (EMRS) வாகனம் ஆகியன பயன்பாட்டில் ஈடுபட்டன. மொத்தம் 14 தீயணைப்பு வீரர்கள், மலேசிய சிவில் பாதுகாப்புப் படை (APM), காவல்துறை மற்றும் அருகிலுள்ள கிராமவாசிகளும் தேடுதலில் பங்கேற்றனர்.
நடவடிக்கை இரவு 7.50 மணிக்கு நிறைவு செய்யப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.





















