அனுமதி அட்டை இல்லாததால், செங்கல் கொண்டு தாக்குதல்: ஆடவர் கைது!

கோலாலம்பூர்:

இஸ்கண்டார் புத்ரி, கெலாங் பாத்தா பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்கு அனுமதி அட்டை இல்லாமல் உள்ளே நுழைய முயன்று ஒரு ஆடவரை தடுத்து நிறுத்திய, நேபாளிய நாட்டு பாதுகாவலர் மீது, செங்கல்லைக் கொண்டு தாக்கிய 37 வயது ஆடவர், கைது செய்யப்பட்டார்.

நேற்று மாலை 2.59 மணியளவில், இந்தச் சம்பவம் நடந்ததாக, காவல்துறை கூறியது.

இந்த, தாக்குதலில் சம்பந்தப்பட்ட பாதுகாவலருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து, காவல்துறை உடனடியாக விசாரணை தொடங்கியது.

விசாரணையின்போது, சந்தேக நபருக்கு குற்றப் பதிவு எதுவும் இல்லை என்பது தெரிய வந்துள்ள நிலையில் சிறுநீர் பரிசோதனையில், போதைப் பொருள் பயன்படுத்தப்படவில்லை என்பதும் உறுதிப்படுத்தப்பட்டது.

மேலும், சந்தேக நபர், வியாழக்கிழமை வரை, விசாரணைக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

எனவேதான், இந்த வழக்கு, குற்றவியல் சட்டம் பிரிவு 324-இன் கீழ், விசாரிக்கப்படுகிறது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டுகள் வரையிலான சிறை தண்டனையும் அல்லது , அபராதமும் அல்லது பிரம்படியும் விதிக்கப்படலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here