கோலா குபு பாரு, செப்டம்பர் 4 –
கம்போங் ஓராங் அஸ்லி பெர்த்தாக்கில் ஆற்றில் ஏற்பட்ட திடீர் நீர் பெருக்கத்தில் சிக்கிய 12 போலிஸ் அதிகாரிகள் உட்பட 22 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டு பிரிவு உதவி இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் முக்தார் இதனை உறுதிப்படுத்தினார்.
அவரது தகவல்படி, இன்று மதியம் பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது பெய்த கனமழையால் ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மாலை 6.42 மணிக்கு அவசர அழைப்பு கிடைத்தது.
உடனடியாக கோலா குபு பாரு தீயணைப்பு, மீட்பு நிலையத்திலிருந்து ஒரு மீட்பு குழுவும், ஒரு ஹிலக்ஸ் பயன்பாட்டு வாகனமும் சம்பவ இடத்திற்குப் புறப்பட்டன. சம்பவம், நிலையத்திலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.



















