இந்தியப் பிரதமர் இரண்டு நாள் பயணமாக சனிக்கிழமை மலேசியா வருகை

கோலாலம்பூர்:

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் அழைப்பின் பேரில், எதிர்வரும் சனிக்கிழமை முதல் மலேசியாவிற்கு இரண்டு நாள் அதிகாரப்பூர்வப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.

இந்தப் பயணத்தின் முக்கிய அம்சங்களாக பிரதமர் மோடி மற்றும் பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆகிய இரு தலைவர்களும் இருதரப்பு உறவுகள் குறித்து விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்துவார்கள் என்று நம்பப்படுகிறது.

பிரதமர் மோடி மலேசியாவிற்கு மேற்கொள்ளும் மூன்றாவது பயணம் இதுவென்று இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் மலேசியாவிலுள்ள இந்திய சமூகத்தினர், தொழிலதிபர்கள் மற்றும் வணிகப் பிரதிநிதிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடுவார் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், 10-வது இந்தியா-மலேசியா சி.இ.ஓ (CEO) மன்றக் கூட்டமும் இந்த விஜயத்தின் போது நடைபெற உள்ளது.

ஒத்துழைப்புக்கான முக்கிய துறைகள்
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு பன்முகத்தன்மை கொண்டது. இந்த விஜயத்தின் போது பின்வரும் துறைகளில் நிலவும் ஒத்துழைப்புகள் குறித்து இரு தலைவர்களும் ஆய்வு செய்வார்கள் என்றும் அது தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here