கோத்தா கினபாலு: கே.கே பிளாசாவிலிருந்து விழுந்த ஆடவர்!

கோலாலம்பூர்:

கோத்தா கினபாலு, கே.கே பிளாசா (KK Plaza) வணிக வளாகத்திலிருந்து, நேற்று காலை, 35 வயது ஆடவர் ஒருவர், கீழே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு வாகனத்தின் மீது விழுந்தார். இதில், அவர் படுகாயமடைந்தார்.

இதனிடையே, நேற்று காலை 11.45 மணியளவில், இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஏராளமானோர், சம்பவ இடத்தில் கூடி, காணொளிகளைப் பதிவு செய்தனர். அதுமட்டுமின்றி, காயமடைந்த போதிலும், அந்த ஆடவர், சுயநினைவுடன் இருந்தார்.

மேலும் சம்பந்தப்பட்ட ஆடவர், எந்த மாடியிலிருந்து விழுந்தார் என்பது, தெளிவாகத் தெரியவில்லை.

மேலும், மூன்று தளங்களைக் கொண்ட, கே.கே பிளாசாவில், பல்வேறு கடைகளும் உணவகங்களும் உள்ளது.

இது தொடர்பாக, கோத்தா கினபாலு தீயணைப்பு, மீட்பு நிலையத் தலைவர் ஆர்டின் கிலு (Ordine Gilu), கூறுகையில், அந்த ஆடவர், சிகிச்சைக்காக, மருத்துவமனைக்கு, கொண்டு செல்லப்பட்டதாகவும், அவரது நிலை, சீராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here