திரையில் இணையும் சூர்யா, நஸ்ரியா

தற்போது வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யாவின் 46வது படம் உருவாகி வருகிறது.

இதையடுத்து, அவரது 47வது படத்தை மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் இயக்க இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் மற்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.

இந்நிலையில், இந்த படத்தின் நாயகியாக நஸ்ரியாவை தேர்வு செய்யும் முயற்சி நடைபெற்று வருவதாகவும், தயாரிப்புக் குழுவும் இதை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக, சூர்யா – நஸ்ரியா இணைந்து ‘புறநானூறு’ படத்தில் நடிப்பதாகக் கூறப்பட்டிருந்தது. ஆனால் அந்த திட்டம் பின்னர் கைவிடப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here