காங்கார்:
கம்போங் சாலாங், ஜாலான் காக்கி புக்கிட் பகுதியில் வசிக்கும் 66 வயது அமலாதின் ரம்லி தலைமையிலான ஒன்பது பேர் கொண்ட தமது குடும்பம், அரசின் சாரா ரஹ்மாவிலிருந்து 900 ரிங்கிட் உதவித் தொகையைப் பெற்றதால் வாழ்க்கைச் செலவுகளை சமாளிக்க முடிந்தது என கூறியுள்ளார்.
மனைவி, ஆறு பிள்ளைகள், கற்றல் குறைபாடு கொண்ட தம்பி என ஒவ்வொருவருக்கும் தலா 100 ரிங்கிட் வழங்கியதாக அவர் தெரிவித்தார்.
மூன்று பிள்ளைகள் உணவு வியாபாரம் செய்கின்றனர்; ஒருவர் ரேலாவில் பணியாற்றுகிறார்; இன்னொருவர் பகுதி நேர வேலை செய்கிறார்; இளைய பிள்ளை மலாயா பல்கலைக்கழக மருத்துவ மையத்தில் பயிற்சி பெறுகிறார்.
“இந்த உதவியால் வீட்டு அத்தியாவசியப் பொருட்களை வாங்க முடிகிறது. இன்று மட்டும் 300 ரிங்கிட் செலவிட்டோம்,” என அவர் கூறினார்.





















