பகாங்: ஆசிரியரிடம் RM230,447 மோசடி!

கோலாலம்பூர்:

பகாங் மாநிலத்தில், 40 வயது ஆசிரியை ஒருவர், காவல்துறை, வழக்கறிஞர்கள், பேங்க் நெகாரா (Bank Negara) அதிகாரிகள் எனப் பாசாங்கு செய்த இணைய மோசடி கும்பலால், RM230,447 ரிங்கிட்டை இழந்துள்ளார்.

இதனிடையே சம்பந்தப்பட்ட அந்த ஆசிரியை, பண மோசடியில் ஈடுபட்டதாக, அந்த மோசடி கும்பல், அவரை நம்ப அமைத்துள்ளது.

அதுமட்டுமின்றி, அவர் பெயரில், 23 வங்கிக் கணக்குகள் இருப்பதாகவும், ஒரு புதிய வங்கிக் கணக்கைத் தொடங்க வேண்டும் என்றும், கடன் பெற வேண்டும் என்றும், மோசடி கும்பல் கூறியது.

தனது சேமிப்புப் பணம், கடன் தொகை, அடகு வைத்த நகைகளின் பணத்தை, “கைது நடவடிக்கையையும், சொத்து முடக்கத்தையும் தவிர்க்க”, சில வங்கி கணக்குகளுக்கு மாற்ற வேண்டும் என்றும், அவரிடம் வலியுறுத்தப்பட்டது.

எனவேதான், கடந்த ஜூன் 24 முதல் செப்டம்பர் 2 வரை, அவர் 11 முறை, பல கணக்குகளுக்குப் பணம் செலுத்தினார்.

பின்னர், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர், மாரான் காவல்துறைத் தலைமையகத்தில் (Maran Police Headquarters) புகார் அளித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, குற்றவியல் சட்டம் பிரிவு 420-இன் கீழ், காவல்துறையினர், இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here