ஜோர்ஜ் டவுன்: கொள்ளை நாடகம் ஆடிய லாரி ஓட்டுநர் கைது!

கோலாலம்பூர்:

பினாங்கு கெலுகோர் (Gelugor) பகுதியில், தான் குத்தப்பட்டதாக, 32 வயதுப் லாரி ஓட்டுநர் ஒருவர், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் தனது நிறுவனத்திற்குச் சொந்தமான, RM3,000 ரிங்கிட் பணத்தைக் கொள்ளையடித்தப் பிறகு, இந்த நாடகத்தை ஆடியுள்ளார்.

கிழக்குக் கடற்கரை காவல்துறைத் தலைவர், ஏசிபி அப்துல் ரோசாக் முகமட் (ACP Abdul Rozak Muhammad) கூறுகையில், மூன்று பேர் தன்னைக் குத்தி, கொள்ளையடித்ததாக, அந்த ஆடவர், புகார் அளித்ததாகக் கூறினார்.

ஆனால், விசாரணையில், அவர், தனது முதலாளியை ஏமாற்ற, இந்த நாடகத்தை ஆடியது, உறுதிப்படுத்தப்பட்டது.

பினாங்கு மருத்துவமனையில், கத்தியால், தன்னை தானே, குத்திக்கொண்டு, சிகிச்சை பெற்று வந்த அந்த ஓட்டுநர் மீது, , குற்றவியல் சட்டம் பிரிவு 182-இன் கீழ், தவறான புகார் அளித்ததற்காக, சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here