முறைகேடு, பணமோசடி: டான் ஸ்ரீ அபு சாஹிட் முகமட் மீது குற்றச்சாட்டு!

கோலாலம்பூர்:

மாஜு ஹோல்டிங்ஸ் (Maju Holdings Sdn Bhd) நிறுவனத்தின் இயக்குநர் டான் ஸ்ரீ அபு சாஹிட் முகமட் (Tan Sri Abu Sahid Mohamed), RM313 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள, நான்கு முறைகேடு குற்றச்சாட்டுகள், RM139 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள, 13 பணமோசடிக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில், குற்றம் சாட்டப்பட்டார்.

இந்தப் புகார்கள், புத்ராஜெயா-கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலைய நெடுஞ்சாலைத் திட்டம் (Putrajaya–KLIA Expressway) MEX II தொடர்பானவை.

உடல்நல குறைவு காரணமாக, அபு சாஹிட் நீதிமன்றத்தில் தள்ளுவண்டி இருக்கையில் அமர அனுமதிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து, நீதிபதி சுஸானா ஹுசின் (Suzana Hussin) முன்பு வாசிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்து அவர் விசாரணை கோரினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here