கோலாலம்பூர்:
55 வயதிற்குப் பிறகு, மலேசியர்களின், ஈ.பி.எஃப் (EPF) சேமிப்பு, ஓய்வூதியத்திற்குப் போதுமானதாக இருக்காது. ஏனெனில், அவர்கள், அந்த நிதியை, எப்போது வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம் என்று, இரண்டாவது நிதியமைச்சர் டத்தோஸ்ரீ அமீர் ஹம்சா அஸிஸான் (Datuk Seri Amir Hamzah Azizan) தெரிவித்தார்.
இதற்கு மாறாக, 55 வயதிற்கு முன்பே, ஓய்வூதியத்திற்கு, போதுமான சேமிப்பு உள்ளதா என்பதை, வயதிற்கேற்ற, `அடிப்படை சேமிப்பு’ (Basic Savings) இலக்கை கொண்டு, மதிப்பிடலாம்.
கடந்த ஜூலை 31-ஆம் தேதி நிலவரப்படி, 18 முதல் 55 வயதுக்குட்பட்ட, 7.44 மில்லியன் உறுப்பினர்களில், 38.3% அல்லது 2.85 மில்லியன் பேர், இந்த அடிப்படை சேமிப்பை எட்டியுள்ளனர். இது, 2022 டிசம்பரில், 30.4% ஆக இருந்தது.
இன வாரியான புள்ளிவிவரங்களில், 1.38 மில்லியன் பூமிபுத்திராக்கள், 1.22 மில்லியன் சீனர்கள், 214,000 இந்தியர்கள் மேலும், 38,000 பிற இனத்தவர்களும், அடிப்படை சேமிப்பு இலக்கை எட்டியுள்ளனர்.
இருப்பினும், பூமிபுத்திராக்கள் மத்தியில், குறைந்த சேமிப்பு, கோவிட்-19 தொற்றுநோயின் போது, மேற்கொள்ளப்பட்ட EPFலிருந்து பணத்தை மீட்கும் சிறப்பு
நடவடிக்கைகளால், பெரிதும் பாதிக்கப்பட்டது.
தற்போது, அரசாங்கம், ஓய்வூதியத்திற்கு, நிலையான வருமானத்தை உறுதிப்படுத்த, சேமிப்பை மீண்டும் கட்டியெழுப்புவதில், கவனம் செலுத்தி வருகிறது.
























