கோலாலம்பூர்:
ஜாலான் ஜொகூர் பாரு–ஆயிர் ஹிதாம் (Jalan Johor Bahru–Air Hitam) சாலையில், நேற்று அதிகாலை 4 மணியளவில், ஔடி ஏ6 (Audi A6) ரக கார் ஒன்று, இரண்டு காவல்துறை ரோந்து மோட்டார் சைக்கிள்கள் மீது மோதியதை தொடர்ந்து 23 வயது ஆடவர் கைது செய்யப்பட்டார்.
ஜொகூர் பாரு உத்தாரா காவல்துறைத் தலைவர், ஏசிபி பால்வீர் சிங் (ACP Balveer Singh), இந்தத் தகவலை உறுதிப்படுத்தினார்.
இந்த விபத்து, இரண்டு காவல்துறை அதிகாரிகள், வாகனப் போக்குவரத்தைக் சீர்படுத்திக் கொண்டிருந்தபோது, சம்பந்தப்பட்ட ஆடவர், தனது காரின் கட்டுப்பாட்டை இழந்ததால், இந்த சம்பவம் நடந்துள்ளது.
இதில், ஒரு காவல்துறை அதிகாரிக்கு, காலில் காயம் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே அந்த ஆடவர் மீது மேற்கொள்ளப்பட்ட மூச்சுப் பரிசோதனை (breathalyser test), சம்பந்தப்பட்ட ஆடவர், மது அருந்தியிருந்ததைக் உறுதிப்படுத்தியது.
இருப்பினும், போதைப் பொருள் பரிசோதனையில் அவர் போதைப் பொருள் உட்கொள்ளவில்லை என்பது தெரியவந்துள்ளது.
எனவே தான் சந்தேக நபர் இரண்டு நாட்களுக்கு விசாரணைக்கு உதவுவதற்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
மேலும், சாலைப் போக்குவரத்துச் சட்டம், பிரிவு 44(1)-இன் கீழ், அவர் விசாரிக்கப்பட்டு வருகிறார். இந்தச் சட்டத்தின் கீழ், குற்றம் நிரூபிக்கப்பட்டால், 15 ஆண்டுகள் வரையிலான சிறை தண்டனையும், RM100,000 ரிங்கிட் வரையிலான அபராதமும், 10 ஆண்டுகளுக்கு, வாகனம் ஓட்டும் உரிமமும் ரத்து செய்யப்படலாம்.





















