கோலாலம்பூர்:
எஸ்.டி.பி.எம். (STPM) தேர்வில், 4.0 சிஜிபிஏவையும் (CGPA) , 99.9% புறப்பாட மதிப்பெண் பெற்ற பினாங்கைச் சேர்ந்த, சிறந்த மாணவர் எட்வர்ட் வோங் (Edward Wong) என்பவருக்கு, மலாயா பல்கலைக்கழகத்தில், கணக்கியல் படிப்புக்கான இடம் ஏன் கிடைக்கவில்லை என்று, உயர் கல்வித் இலாகா (JPT) தெளிவுபடுத்தியுள்ளது.
இதனிடையே, அந்தப் படிப்பிற்காக விண்ணப்பித்த, 2,291 பேரில், அவர், 1,129-ஆம் இடத்திற்கு தகுதி பெற்றார். ஆனால், அந்தப் படிப்பிற்கு, 85 இடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்தது. அதுமட்டுமின்றி இதர மூன்று பல்கலைக்கழகங்களின் தரவரிசையிலும் அவர் தேர்வு செய்யப்படாததால், அவருக்கு, ஐந்தாவது விருப்பத் தேர்வான, `மேலாண்மை இளங்கலைப் பட்டப் படிப்பு’ (Bachelor of Management with Honours) வழங்கப்பட்டுள்ளது என்று உயர்கல்வி இலாக்கா தெளிவுபடுத்தியது.
அதுமட்டுமின்றி, யுபிஇயூஆன்லைன் (UPUOnline) அமைப்பு மூலம், அனைத்து இடங்களும், தகுதியின் அடிப்படையில் மட்டுமே வழங்கப்பட்டன என்றும், இதில், எந்தவொரு குறைபாடும் இல்லை என்றும், உயர் கல்வித் இலாகா கூறியது.
இருப்பினும், தங்களது அமைப்பை மேம்படுத்திக்கொள்ள கருத்துகளை ஏற்றுக்கொள்ள, தயாராக இருப்பதாகவும் அது தெரிவித்தது.
இதற்கிடையில், எம்.சி.ஏ. (MCA) தலைவர் டத்தோஸ்ரீ வீ கா சியோங் (Datuk Seri Wee Ka Siong), இந்த அமைப்பு, நியாயமற்றது என்று விமர்சித்த பின்னர், எட்வர்ட் வோங்கின் வழக்கு, கவனத்தை ஈர்த்தது.
அவர், பின்னர், அதே மலாயா பல்கலைக்கழகத்தின், கணக்கியல் படிப்பில், RM83,800 ரிங்கிட் கட்டணத்துடன், திறந்த சேர்க்கை (Open Intake) மூலம், ஏற்றுக்கொள்ளப்பட்டார்.
இது, அரசு மானியம் பெற்ற கட்டணத்தை விட, 10 மடங்கு அதிகம்.
இதனைத் தொடர்ந்து, அனைத்து 4.0 சிஜிபிஏ பெற்ற எஸ்.டி.பி.எம். மாணவர்களுக்கும், பொதுப் பல்கலைக்கழகங்களில் இடம் வழங்கப்பட்டுள்ளதாகவும், ஆறு மாணவர்களின் விண்ணப்பங்களின் முடிவுகள் மட்டுமே, இன்னும், நிலுவையில் இருப்பதாகவும், உயர் கல்வித் இலாகா தெரிவித்தது.
அது மட்டும் இன்றி, மேல்முறையீடு தொடர்பான, ஆலோசனைகள், செப்டம்பர் 12 வரை, திறந்தே இருக்கும்.





















