கோலாலம்பூர்:
தோகாவில், ஹமாஸ் (Hamas) தலைவர்கள் மீது, இஸ்ரேல் நடத்தியத் தாக்குதலுக்குப் பிறகு, கச்சா எண்ணெய் விலை, அதிகரித்தது. பிரெண்ட் கச்சா எண்ணெய் (Brent crude), ஒரு பீப்பாய், 0.56% அதிகரித்து, US$66.39 ஆகவும், டபிள்யு.டி.ஐ. (WTI) 0.54% அதிகரித்து, US$62.97 ஆகவும் உயர்ந்தது.
மத்தியக் கிழக்கு நாடுகளில், பதற்றம் அதிகரிப்பதே, இதற்கு முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது.
ஒரு முக்கிய அமெரிக்க நட்பு நாடாகவும், வளைகுடா கூட்டுறவு கவுன்சிலின் (GCC) உறுப்பினராகவும், கத்தாரின் பதில் நடவடிக்கை, மத்தியக் கிழக்கு நாடுகளின், எதிர்காலப் பாதுகாப்பு பேச்சுவார்த்தையின், போக்கை வடிவமைக்கும் என்று, ஆய்வாளர்கள் எச்சரித்தனர். பேச்சுவார்த்தைகள், தற்போது, தடைபட்டுள்ளன.
இந்தத் தாக்குதல், அனைத்துலகச் சட்டத்தை மீறுவதாகவும், பொதுப் பாதுகாப்பிற்கு, அச்சுறுத்தலாக இருப்பதாகவும், கத்தார், கண்டனம் தெரிவித்துள்ளது.
























