சுற்றுலாத் துறை, நாட்டின் பொருளாதாரத்திற்கு, RM291.9 பில்லியன் பங்களிப்பு!

கோலாலம்பூர்:

மலேசியாவின் சுற்றுலாத் துறை, 2024-ஆம் ஆண்டில், தேசியப் பொருளாதாரத்திற்கு, RM291.9 பில்லியன் ரிங்கிட் அல்லது, 15.1% பங்களித்துள்ளது.

இது, முந்தைய ஆண்டை விட, 7.4% வளர்ச்சி கண்டுள்ளது என, புள்ளிவிவரத் துறை (DOSM) இன்று, வெளியிட்ட, சுற்றுலா துணை கணக்கு காட்டுகின்றன.

தலைமைப் புள்ளிவிவர அதிகாரி Datuk Seri Dr Mohd Uzir Mahidin கூறுகையில், சில்லறை வர்த்தகம் (RM154.5 பில்லியன்), உணவு பானங்கள் (RM47.7 பில்லியன்) ஆரோக்கியம், கல்வி எம்.ஐ.சி.இ. (MICE) போன்ற பிற சேவைகள் (RM39 பில்லியன்) என, மொத்தமாக, இந்தத் துறையின் செயல்திறனில், 80% பங்களிப்பை, அளித்துள்ளன.

பெரும்பாலான சுற்றுலாத் துணைத் துறைகள், கோவிட்-19 தொற்றுநோய்க்கு முந்தைய நிலையை விட மேம்பட்டு உள்ளன.

இருப்பினும், தங்குமிடம், பயணிகள் போக்குவரத்து, இன்னும், 2019-ஆம் ஆண்டின் அளவை, விடக் குறைவாகவே உள்ளன.

அதுமட்டுமின்றி வரும் சுற்றுலாப் பயணிகளின் செலவு, 41.1% அதிகரித்து, RM107 பில்லியனை எட்டியுள்ளது. இது, ஷாப்பிங், போக்குவரத்து தங்குமிடங்கள் மூலம், சாத்தியமானது.

மேலும், உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் செலவு, 25.1% அதிகரித்து, RM98.4 பில்லியனாக உயர்ந்துள்ளது. இது, மலேசியர்கள், தொடர்ந்து, பயணம் மேற்கொள்வதையும் ஓய்வு நடவடிக்கைகளில், நாட்டம் கொண்டுள்ளதையும் காட்டுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here