கோலாலம்பூர்:
பபார், எஸ்.எம்.கே.ஏ. துன் டத்து முஸ்தபா பள்ளியில், 14 வயது மாணவி Zara Qairina Mahathir, ஆம்புலன்ஸில், கொண்டு செல்லப்பட்ட பிறகு, இரு மாணவர்களுக்கு, அவரது இரத்தத்தைச் சுத்தம் செய்ய, உத்தரவிடப்பட்டதாக, ஒரு பாதுகாவலர், கொரோனர் நீதிமன்றத்தில் (Coroner’s Court) சாட்சியம் அளித்துள்ளார்.
விபத்து நடந்த இடத்தில், முதலில் இருந்தவர்களில் ஒருவரான லினா மான்சோடிங் (Linah Mansoding) என்பவர், மருத்துவப் பணியாளர்கள் வருவதற்கு முன்பே, வார்டன் உஸ்தாஸ் அஸ்ஹாரி (Ustaz Azhari), மூன்று மாணவர்களை, ஸாரா கைரினாவின் உடலை, வெளியேறும் இடத்திற்கு, அருகில் நகர்த்துமாறு, கேட்டதாக, நம்பப்படுகிறது.
பின்னர், மற்ற இரு மாணவர்களை, இரத்தத்தைக் கழுவுமாறு, அவர், கட்டளையிட்டார்.
காலை, 3.15 மணியளவில், சுயநினைவின்றி கண்டெடுக்கப்பட்ட ஸாரா கைரினா, உயரமான இடத்தில் இருந்து, விழுந்ததால், ஏற்பட்டக் கடுமையான, மூளைக் காயங்களால், உயிரிழந்தார்.
ஸாராவின் இடது கால், முறிந்து, அவர் விழுந்த இடத்திலும், உடல் மாற்றப்பட்ட இடத்திலும், இரத்தம் உறைந்திருந்ததாக, லினா மேலும் கூறினார்.
மழை பெய்ததால், அனைத்து இரத்தமும் சுத்தம் செய்யப்படவில்லை, அவை மழை நீரில் அடித்துச் செல்லப்பட்டன.
மற்றத் தடயங்கள், தரையில், கருப்பு நிறமாக மாறியிருந்தன.
ஸாராவின் இறந்து கிடந்த உடலைப் Linah புகைப்படம் எடுத்ததால், அதை நீக்குமாறு அஸ்ஹாரி தன்னிடம், கேட்டுக்கொண்டதாகவும், மாணவர்கள், அதைப் பார்த்தால், அது, சமூக வலைத்தளங்களில், பரவி விடும் என்றும், அஞ்சியதாக, லினா, வெளிப்படுத்தினார்.
இதனிடையே லீனா, ஸாரா முதன் முதலில் விழுந்து கிடந்தபோது எடுத்த புகைப்படம், இவ்வழக்கில் ஒரு முக்கியமான ஆதாரம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு, தொடர்ந்து நடைபெற்று வரும் வேளையில் ஸாரா கைரினாவின் மரணத்திற்கான காரணத்தை, வெளிச்சத்திற்கு கொண்டு வர, அழைக்கப்பட்ட, ஆறாவது சாட்சி, லினா ஆவார்.




















