கோலாலம்பூர்:
மோசமான வானிலை, ஏழு மாவட்டங்களைப் பாதித்த, பேரிடர் நெருக்கடி காரணமாக, நாளை, பாடாங் மெர்டேகாவில் (Padang Merdeka), நடைபெறவிருந்த, சபா மாநில அளவிலான, மலேசிய தின கொண்டாட்டத்தை, சபா அரசாங்கம், ரத்து செய்துள்ளது.
இதனிடையே, நிலைமையைச் சமாளிப்பது, நிவாரணப் பணிகளை ஒருங்கிணைப்பது, பாதிக்கப்பட்ட சமூகத்தினருக்கு, விரைவான மீட்புப் பணிகளை, உறுதிப்படுத்துவது ஆகியவை, அரசாங்கத்தின் முன்னுரிமையாகும் என்று, முதலமைச்சர் டத்தோஸ்ரீ ஹாஜிஜி நூர் கூறினார்.
மேலும், பொதுமக்கள், விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், அதிகாரிகளுக்கு, ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றும், அவர், கேட்டுக்கொண்டார்.
எனவேதான், எதிர்பாராத வானிலை காரணமாக, இந்த ரத்து, செய்யப்பட்டது என்று, கொண்டாட்டத்திற்குத் தலைமை தாங்கிய, சுற்றுலா, கலாச்சாரம், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ கிறிஸ்டினா லியூ கூறினார்.
இன்று நண்பகல் நிலவரப்படி, போஃவொர்ட், பெனம்பாங், மெம்பாகூட், பாபார், புத்தாத்தான் (Beaufort, Penampang, Membakut, Papar, and Putatan) ஆகிய, ஐந்து மாவட்டங்கள், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
மேலும், 415 பேர், வெளியேற்றப்பட்டுள்ளனர். தொடர் கனமழை, பெனாம்பாங்-தாம்புனான் சாலை, புக்கிட் பெண்டேரா, உள்ளிட்ட, பல பகுதிகளில், நிலச்சரிவுகளை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், ஒரு 275kV மின்சாரக் கோபுரமும், சரிந்து விழுந்து, சபா மாநிலத்தின், கிழக்குக் கடற்கரைப் பகுதியில், மின்சார விநியோகத்தைத், தடை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.





















