கோலாலம்பூர்:
எல்ப்டிவி’ (*ElfTV*) என்ற, இணையத்தளத்தில், கிரிப்டோகரன்சி திட்டத்தின் மூலம், ஏமாற்றப்பட்ட, 60 வயதுப் பெண், ஒருவர், சுமார் RM5 மில்லியன் ரிங்கிட்டிற்கும் மேலாக, இழந்துள்ளார்.
பேராக்’ காவல்துறைத் தலைவர், டத்தோ நூர் ஹிசாம் நோர்டின் கூறுகையில், அந்தப் பெண், முகநூல், ஏபி4 டிரெண்ட் நேவிகேஷன்’ என்ற, முதலீட்டு குழுமத்தால், ஈர்க்கப்பட்டார்.
ஜூலை 2025-இல், அவர், தனது முதல் பரிவர்த்தனையாக, RM10,000 ரிங்கிட்டை மற்றொரு வங்கி கணக்கில் செலுத்தியுள்ளார்.
பின்னர், ஆகஸ்ட் மாதத்திற்குள், அவரதுப் பரிவர்த்தனைகள், மொத்தம், RM5,030,970-யை, எட்டின.
இதனிடையே, சம்பந்தப்பட்ட மோசடி கும்பல், அவரது நம்பிக்கையைப் பெற, போலியான இலாபங்களைக், காட்டியது. அவர், பணத்தை எடுக்க முயன்றபோது, அவரது அணுகலை, அந்த கும்பல் தடுத்தனர். இந்தத் தளம், பதிவு செய்யப்படாதது, சட்டவிரோதமானது என்று, செக்யூரிட்டி கமிஸன் உறுதிப்படுத்தியது.
இந்த வழக்கு, குற்றவியல் சட்டம் பிரிவு 420-இன் கீழ், விசாரிக்கப்பட்டு வருகிறது.
இதனைத் தொடர்ந்து விரைவான, அதிக வருமானத்தை, உறுதியளிக்கும், சமூக வலைத்தள முதலீட்டுச் சலுகைகள் குறித்து, பொதுமக்கள், எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று, காவல்துறை, கேட்டுக்கொண்டுள்ளது.





















