நடிகர் கே.பி.ஒய் பாலா மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார்

சென்னை,சின்னத்திரையில் விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்றவர் கே.பி.ஒய்.பாலா. இவரது நடிப்பில் சமீபத்தில் ‘காந்தி கண்ணாடி’ என்ற படம் வெளியானது. இந்த படத்தின் மூலம்இவர் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். ஷெரீப் இயக்கிய இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில், நடிகர் பாலா மீதும், காந்தி கண்ணாடி படக்குழு மீதும் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது, காந்தி கண்ணாடி திரைப்படத்தில் பிரதமர் மோடியை இழிவுபடுத்தும் காட்சிகள் மற்றும் வசனங்கள் இருப்பதாகக் கூறி, சிவசேனா கட்சியினர் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். இப்படத்தின் இயக்குனர் ஷெரீப், நடிகர் கேபிஒய் பாலா மற்றும் பாலாஜி சக்திவேல் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here