பண்டான் எம்பி ரஃபிசியின் மகன் மீதானத் தாக்குதல்: சிசிடிவி காட்சிகள் தெளிவாக இல்லை!

கோலாலம்பூர்:

பண்டான் நாடாளுமன்ற உறுப்பினர், டத்தோஸ்ரீ ரஃபிசி ராம்லியின் மகன் மீதான, தாக்குதல் தொடர்பான விசாரணை, இன்னும், நடைபெற்று வரும் நிலையில், தெளிவாக இல்லாத, சிசிடிவி (CCTV) காட்சிகள் காரணமாக, சந்தேக நபர்களை, அடையாளம் காண்பது, கடினமாக உள்ளது என்று, காவல்துறைத் தலைவர், டத்தோஸ்ரீ முகமட் காலிட் இஸ்மாயில் உறுதிப்படுத்தினார்.

கடந்த மாதம், பிற்பகல், 2 மணியளவில், ஒரு வணிக வளாகத்தில், இரண்டு ஆண்கள், கருப்பு நிற உடையும், தலைக்கவசங்களுடன், ஒரு மோட்டார் சைக்கிளில், வந்து, ரஃபிசியின் மகனை, இழுத்துச் சென்று, ஒரு மர்மப் பொருளை, ஊசி மூலம், செலுத்தியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து காவல்துறையினர், குடும்ப உறுப்பினர்கள், சாட்சிகள், வணிக வளாக ஊழியர்கள் உட்பட, 19 பேரிடம் இதுவரை வாக்குமூலங்களைப், பதிவு செய்துள்ளனர்.

அதுமட்டுமின்றி, ரஃபீசியின் மகன் மீது செலுத்தப்பட்ட திரவத்தின் தன்மையை, கண்டறிய, மருத்துவமனையின், இரசாயன அறிக்கையை, காவல்துறை, எதிர்பார்த்துள்ளது.

இந்த விசாரணை, தொடர்ந்து, நடைபெற்று வருவதால், பொறுமையாக இருக்குமாறு, சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ சுல்கிஃப்லி அகமாட் கேட்டுக்கொண்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here