கோலாலம்பூர்:
மூவார், ஜாலான் பக்ரி, கம்போங் தெங்கா பகுதியில் நேற்று காலை, 32 வயதுடைய ஆடவர் ஒருவர், தனது தந்தையை, பிரம்பாலும், கத்தியாலும், தாக்கியதுடன், வீட்டை, தீயிட்டுக் கொளுத்தினார்.
இதனைத் தொடர்ந்து, அந்த ஆடவருக்கு, மனநலம், பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று, சந்தேகிக்கப்படுகிறது. இந்தச் சம்பவத்தில், 70 வயதான, அவரது தந்தை, காயமடைந்து, சுல்தானா பாத்திமா நிபுணத்துவ மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்தச் சம்பவத்தில், `மெத்தம்பெட்டமைன்’ (methamphetamine) போதைப்பொருளை, பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்ட, சந்தேக நபருக்கும், லேசானக் காயங்கள், ஏற்பட்டுள்ளன.
மேலும் இந்தத் தீவிபத்தில், 70% வீடு, ஒரு கார், ஒரு மோட்டார் சைக்கிள், ஆகியவை, சேதமடைந்தன. இதில், RM100,000 முதல் RM150,000 ரிங்கிட் வரை, இழப்பு, ஏற்பட்டிருக்கலாம் என்று, மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம், குற்றவியல் சட்டத்தின், பிரிவுகள் 436, 324-இன் கீழ், விசாரிக்கப்படுகிறது.
தீ, காலை, 11.06 மணிக்கு, முழுமையாக அணைக்கப்பட்டது என்று, மூவார் தீயணைப்பு நிலையத்தின் தலைவர், II துணை கண்காணிப்பாளர் ஷாஹ்ரிசால் மோக்தார் (Deputy Fire Superintendent II Shahrizal Mokhtar) உறுதிப்படுத்தினார்.




















