பட்ஜெட் 2026: போலீஸ் துறையின் பொருளாதார வசதிகள் மேம்படுத்தப்படுவதாக நாங்கள் எதிர்பார்க்கிறோம்.-போலீஸ் படை தலைவர்

கோத்தா பாரு,

எதிர்வரும் 2026 பட்ஜெட் போலீஸ் துறைக்கு பொருளாதார வசதிகள் மற்றும் செயல்பாட்டு திறன்களை மேம்படுத்தும் பணியினை ஒதுக்குமென போலீசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

வேகமாக மாறும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு பதில் அளிக்க புதிய மாற்றங்கள் தேவை, குறிப்பாக AI போன்ற தொழில்நுட்பங்களை போலீஸ் நடவடிக்கைகளில் உட்படுத்துதல் அவசியம் என்றார் தேசிய போலீஸ் படை தலைவர் டத்தோ ஸ்ரீ மொஹமட் காலிட் இஸ்மாயில்.

“எதிர்வரும் பட்ஜெட்டில், போலீஸ் துறையின் பொருளாதார வசதிகள் மேம்படுத்தப்படுவதாக நாங்கள் எதிர்பார்க்கிறோம். தொழில்நுட்பத்தில் வேகமாக மாறும் சூழ்நிலை, குறிப்பாக AI, நமது பணிகளில் பயிற்றுவித்து செயல்திறன் மற்றும் வேகத்தை அதிகரிப்பது முக்கியம்,” என்று அவர் கூறினார்.

புதிய தொழில்நுட்பத்தின் பயன்பாடு அனைத்து மட்டங்களிலும் (அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் சிவிலியன் பணியாளர்கள்) நடைமுறைப்படுத்தப்பட வேண்டும், இதனால் கடமைகள் சரியான முறையில் ஒருங்கிணைக்கப்படலாம்.

மலேசிய போலீஸ் நிர்வாக மற்றும் சிவிலியன் சேவை பணியாளர் சங்கத்தின் மாநாட்டில் கலந்துகொண்ட மொஹமட் காலிட் இந்த கருத்துக்களை முன்வைத்தார்.

பட்ஜெட் 2026 வரும் மாதத்தில் பிரதமரால் சபையில் முன்வைக்க்கப்படும்போது பொதுமக்கள் மற்றும் சிவில் பணியாளர்களுக்காக நல்ல செய்திகளை வழங்கும் என்று நேற்று, அரசுத் தலைமைச் செயலாளர் டான் ஸ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பக்கர் குறிப்பிட்டிருந்தார்.

“நிச்சயமாக நல்ல செய்திகள் இருக்கும், ஆனால் இபோதைக்கு பகிர முடியாது. இது மக்களுக்கு மற்றும் சிவில் பணியாளர்களுக்கு நன்மை அளிக்கும். இது மடானி அரசு, மக்கள் தேவைகளுக்கு கவனம் செலுத்தும் அரசு,” என்று அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here