கோலாலம்பூர்,
Apple Store TRX-இல் புதிய iPhone 17 தொடர் விற்பனைக்கு வந்துதுமுதல் உலகளாவிய அளவில் தீவிர கவனத்தை பெற்றுள்ளது. இந்த iPhone 17 Proஐ முதலில் வாங்கவேண்டும் என சில நாட்கள் முன்பே விமானத்தில் பயணித்து கோலாலம்பூரில் வந்து காத்திருந்து, வரிசையில் முதல் இடத்தையும் பிடித்து போனை வாங்கியிருக்கிறார் Tushar Ahmed Hasan என்ற பங்களாதேஷ் நபர்.
“நான் எப்படியாவது இந்த போனை வாங்க வேண்டும் என உறுதிகொண்டேன், எனவேதான் பங்களாதேஷ் இல் இருந்து வந்தேன். இன்று iPhone 17 Pro Max Cosmic Orange என்ற போனையும் வாங்கிவிட்டேன், இப்போது நான் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறேன் என்கிறார் அந்த நபர்.
அந்த நிர்வாகம் அனுமதித்த போனுக்கான வரிசையில் கலந்து கொள்ள நான் வியாழக்கிழமை காலை 11 மணிக்கு முன்னரே queue handband ஐ பெற்றதாவும் , மேலும் இன்று அதிகாலை 4 மணிக்கு முன்னரே வரிசைக்கு வந்துவிட்டதாகவும், நான்தான் வரிசையில் நின்ற முதல் வாடிக்கையாளர் என்றும் இந்த போனை வாங்குவதற்கு வரிசையில் சுமார் நான்கு மணி நேரத்துக்கு மேல் காத்திருந்தாகவும் அவர் தெரிவித்தார்.
நான் புதிய தொலைபேசியில் உள்ள கேமரா அப்டேட்கள் பற்றி பெரும் ஆர்வம் கொண்டவன், அதிலும் கேமராவை அதிகம் விரும்புகிறேன், இதில் உள்ள center stage அதிக மக்கள் வரும் போது தானாக சரிசெய்யும் என்றும், இதில் ultra zoom வசதி உள்ளது அவர் கூறினார்.
மலேசியா உலகளாவிய “Day 1” launch சில் கலந்துகொள்ளும் முதலாவது நாடுகளில் ஒன்றாக இந்த வருடம் அறிவிக்கப்பட்டுள்ளது. Apple Store TRX காலை 8 மணிக்கு திறந்ததும், உள்ளூர்வாசிகள் மட்டுமல்லாமல் வெளிநாட்டு வாடிக்கையாளர்களு ம் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்




















