சுமார் 15,000 பேர் பங்கேற்கும் சரோங் மியூசிக் ரன்: இன்று 10 KL சாலைகள் தற்காலிக மூடல்

கோலாலம்பூர்,

இன்று, மலேசிய சரோங் மியூசிக் ரன் 2025 (Malaysia Sarong Music Run 2025 – MSMR) நடைபெறுவதையொட்டி இன்று (செப் 20) கோலாலம்பூர் நகர மையத்தில் உள்ள 10 முக்கிய சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதுடன் மாற்று வழிகள் ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என கோலாலம்பூர் துணை காவல் துறைத் தலைவர் டத்தோ முகமட் யூசுப் தெரிவித்துள்ளார்.

KLCC (ஜாலான் அம்பாங்) முன்பு மாலை 3.00 மணிக்கு தொடங்கும் இந்த நிகழ்ச்சியில் 15,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 5 கி.மீ. Malaysia Speed Run மற்றும் 5 கி.மீ. Fun Run என இரண்டு பிரிவுகள் இடம்பெறுகின்றன.

சாலைகள் பிற்பகல் 2.30 மணி தொடக்கம் இரவு 8.00 மணிக்குள் முழுமையாக திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்படும் சாலைகள்:

-Jalan P. Ramlee
-Jalan Ampang
-Jalan Pinang
-Jalan Kia Peng
-Jalan Stonor
-Jalan Conlay
-Jalan Raja Chulan
-Jalan Bukit Bintang
-Jalan Sultan Ismail
-Jalan Ampang (from Jalan Tun Razak heading to KLCC / from Malaysian Rubber Board heading to Jalan Tun Razak).

பொதுமக்கள் தடைசெய்யப்பட்ட இடங்களில் அல்லது போக்குவரத்தை தடுக்கும் வகையில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என போலீசார் அறிவுறுத்தினர்.

மேலும் தகவலுக்கு:
📞 KL போலீஸ் ஹாட்லைன்: 03-2115 9999
📞 KL போக்குவரத்து விசாரணை & அமலாக்கத் துறை (JSPT KL) அலுவலகம்: 03-2071 9999
🌐 JSPT KL Facebook: facebook.com/JsptKL
அல்லது அருகிலுள்ள போலீஸ் நிலையத்தை தொடர்புகொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here