டான்ஸ்ரீ வீட்டிலிருந்து தங்கக் கட்டி, வைரம் பறிமுதல் மதிப்பு 16 மில்லியன் ரிங்கிட் .

கோலாலம்பூர்,

கிள்ளான் பள்ளத்தாக்கில் நெடுஞ்சாலை நிர்மாணிப்பு திட்டத்திற்கான நிதி முறைகேடு தொடர்பான புலன் விசாரணையில் ஈடுபட்டிருக்கும் எம்ஏசிசி எனப்படும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் கிட்டத்தட்ட 16 மில்லியன் ரிங்கிட் மதிப்புடைய ஆடம்பரப் பொருட்களை பறிமுதல் செய்திருக்கிறது.

அவற்றுள் தங்கக் கட்டிகள், வைரக் கற்கள், சூதாட்டக் கருவிகள் ஆகியவையும் அடங்கும் என்று எம்ஏசிசி வியூக தொடர்பு பிரிவு வெளியிட்ட அறிக்கை கூறியது.

நேற்று முன்தினம் பண்டார் தாசேக் செலாத்தான் செராசில் டான்ஸ்ரீ ஒருவரின் வீட்டை சோதனை செய்தபோது இவை கைப்பற்றப்பட்டன. கிட்டத்தட்ட 3 மில்லியன் ரிங்கிட் மதிப்புடைய 84 ஆடம்பர கைப்பைகள், ஏறத்தாழ 1 மில்லியன் ரிங்கிட் மதிப் புடைய 11 உயர் ரக கடிகாரங்கள், தங்கக் கட்டிகள், தங்க சில்லரை நாணயங்கள், தங்க சிலை ஆகியவையும் கைப்பற்றப்பட்டன.

அதேசமயம் பறிமுதல் செய்யப்பட்ட வைரம், தங்க நகைகள் மதிப்பு 4 மில்லியன் ரிங்கிட் ஆகும். ஒரு செட் சூதாட்ட கருவிகள் கைப்பற்றப்பட்டன. ஆடம்பர வகையைச் சேர்ந்த இவற்றின் மதிப்பு 1 லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட் ஆகும். இதற்கிடையே அந்த டான்ஸ்ரீயின் வீட்டில் ஆயுதம், தோட்டாக்கள் வைப்பதற்காக ஒரு ரகசிய அறை இருந்ததும் எம்ஏசிசி அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டது.

ஆனால், அந்த டான்ஸ்ரீக்கு சொந்தமான பாதுகாவல் நிறுவனத்தின் பேரில் அங்கிருந்த ஆயுதங்கள் பதிவு செய்யப்பட்டிருந்ததால்) அங்கிருந்து எதுவும் கைப்பற்றப்படவில்லை.

அந்த வீட்டில் ஆயுதம் வைப்பதற்கான ரகசிய அறை இருந்ததால் அந்த டான்ஸ்ரீயிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்ய சிறப்புப் பணிக் குழுவை எம்ஏசிசி பயன்படுத்தியது. இதற்கிடையே அந்த டான்ஸ்ரீயின் வீட்டிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு ஏறத்தாழ 16 மில்லியன் ரிங்கிட் என்பதை எம்ஏசிசி தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அஸாம்பாக்கி உறுதிசெய்தார்.

மேலும் பல பொருட்கள் பறிமுதல் செய்யப்படலாம் என்ற சாத்தியத்தை அபெர் நிராகரிக்கவில்லை. அந்த டான்ஸ்ரீயின் உடல்நிலை காரணமாக அவரிடம் வாக்குமூலம் பெறுவது வேறொரு தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது என்று அவர் தெரிவித்தார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here