எஸ்.வெங்கடேஷ்
1. இந்த திட்டத்திற்கு தகுதி பெறுபவர்கள் யார்?
– சிடிஎல், பிடிஎல், எல்டிஎல் ஆகிய ஓட்டுனர் உரிமங்களை ( இன்னும் செயல்பாட்டில் இருக்கும்) வைத்திருக்க வேண்டும். மற்றும் மலேசிய குடிமக்களுக்கான அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும்
(வாகன ஓட்டுனர் உரிமம் குறித்த விவரங்களுக்கு https://www.jpj.gov.my/pusat-media-3/informasi-perkhidmatan-jpj/
என்ற ஜேபிஜேவின் அதிகாரப்பூர்வ தளத்தை வலம் வரலாம்)
2. இந்த திட்டம் தொடங்கப்படுவதற்கு முன் தகுதிக்கூறுகளை சரிப பார்ப்பது எப்படி?
– இன்று (செப்டம்பர் 25) தொடங்கி www.budimadani.gov.my என்ற அதிகாரப்பூர்வ தளத்தில் சரி பர்க்கலாம். அதில் தகுதிக் கூறுகள் இடத்தில் உங்கள் மைகார்ட் எண்ணை எழுதுங்கள்.

3. இத்திட்டத்தில் தகுதி பெற்றால் எனக்கு இலவசமாக பெட்ரோல் கிடைக்குமா?
– இல்லை. தகுதி பெற்ற மலேசியர்களுக்கு தற்போதைய விலையை காட்டிலும் இன்னும் மலிவான இலக்கிடப்பட்ட விலையில் அதாவது 1 ரிங்கிட் 99 காசு விலையில் ஒரு லிட்டர் ரோன் 95 ரக பெட்ரோல் விற்கப்படும்.
4. பெட்ரோல் நிலையங்களுக்கு செல்லாமலே என்னால் இத்திட்டத்திற்கான தகுதிக்கூறுகளை சரிப் பார்க்க முடியுமா?
– முடியும். www.budimadani.gov.my என்ற அதிகாரப்பூர்வ தளம் மட்டுமல்லாது [email protected] என்ற மின்னஞல் வாயிலாகவும் 1300-88-9595 என்ற அழைப்பு எண் வாயிலாகவும் +603-2631 4595 என்ற வாட்ஸ்ஆப் எண் வாயிலாகவும் சரிப் பார்க்கலாம்.
5. ஒரு வேளை என்னிடம் கணினி, விவேக கைத்தொலைப்பேசி இல்லையென்றால் எப்படி தகுதிக் கூறுகளை சரிப் பார்ப்பது?
– இச்சூழ்நிலையில் 1300-88-9595 என்ற எண் வாயிலாக பூடி மடானி சேவை மையத்தை தொடர்பு கொள்ளலாம். அல்லது நாடு தழுவிய அளவில் உள்ள தேசிய தகவல் பரப்பு மையங்களுக்கும் (நாடி) வருகை புரியலாம்.

6. நான் இப்போதுதான் ஓட்டுனர் உரிமம் பெற்றேன். BUDI95 திட்டத்தில் நான் தகுதி பெற்றுளேனா?
– முதன்மை தகவல் தளம் (சிடிபி) புதுப்பிக்கப்பட்ட உடனே நீங்கள் இத்திட்டத்திற்கு தகுதி பெறுவீர்கள்.
குறிப்பாக 15ஆம் தேதிக்குள் ஓட்டுனர் உரிமம் பெற்றால் அடுத்த மாதம் முதல் தேதியில் தகுதி மேற்கொள்ளப்படும். 15ஆம் தேதிக்கு பிறகு உரிமம் பெற்றால் அதற்கும் அடுத்த மாதத்தில் தகுதி மேற்கொள்ளப்படும்.
7. ஒரு வேளை நான் ஒன்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் வைத்திருந்தால் BUDI95 திட்டத்திற்கான எனது தகுதிக்கூறுகளும் பல மடங்குகளாக அதிகரிக்கப்படுமா?
– பொதுவாக ஒவ்வொரு நபருக்கும் சமமான தகுதிதான் அனுமதிக்கப்படுகிறது. இதில் வாகங்களின் எண்ணிக்கை சேர்த்துக் கொள்ளபடுவதில்லை.
8. இந்த திட்டத்தின் கீழ் ரோன் 95 ரக பெட்ரோல் விற்பனையில் அரசாங்கம் தினசரி கட்டுபாடு ஏதும் வைத்துள்ளதா?
– தினமும் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை இத்திட்டத்தின் கீழ் பெட்ரோல் வாங்குவதற்கு தடை ஏதும் இல்லை.

9. இத்திட்டத்தில் ஒவ்வொரு நபர்களுக்கும் வெவ்வேறு அளவில் பெட்ரோல் வழங்கப்படுகிறதா?
தகுதி பெற்ற மலேசியர்கள் அனைவருக்கும் ஒரே அளவில்தான் இந்த இலக்கிடப்பட்ட விலையில் ரோன் 95 ரக பெட்ரோல் வழங்கப்படுகிறது.
10. இந்த திட்டத்தின் கீழ் ஒரு முறை வாங்கும் பெட்ரோல் அளவை நானாகவே நிர்ணயம் செய்து கொள்ளலாமா?
– இந்த திட்டத்தில் மீத அளவு முடியும் வரையில் நீங்கள் நிரப்பும் பெட்ரோல் அடிப்படையில் (லிட்டர்) அதன் அளவு கணக்கிடப்படும்
தொடரும்…..





















