ஈப்போவில் குடிநுழைவுத்துறை மேற்கொண்ட நடவடிக்கையில் 11 வெளிநாட்டுப் பெண்கள் கைது

ஈப்போ:

Op Gegar என்ற குறியீட்டுப் பெயரில் பேராக் குடிநுழைவுத் துறை மேற்கொண்ட ஒரு சிறப்பு நடவடிக்கையில் மொத்தம் 11 வெளிநாட்டுப் பெண்களை ஈப்போவில் உள்ள பொழுதுபோக்கு மையத்தில் இன்று அதிகாலை தடுத்து வைத்துள்ளது.

புகார்கள், கண்காணிப்பு மற்றும் உளவுத்துறையின் விளைவாக அந்த வளாகத்தில் பேராக் குடிவரவு புலனாய்வு மற்றும் செயல்பாட்டுப் பிரிவு இந்த சோதனையை நடத்தியதாக அதன் இயக்குனர் Meor Hezbullah Meor Abd Malik தெரிவித்தார்.

“குறித்த நடவடிக்க 38 குடிநுழைவு அதிகாரிகள் நேற்று இரவு 11.30 மணி முதல் இன்று அதிகாலை 1.30 மணி வரை நடத்தப்பட்டது, மேலும் பொழுதுபோக்கு மையத்தில் 32 வெளிநாட்டு பிரஜைகளிடம் சோதனை நடத்தப்பட்டது,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

“அதைத் தொடர்ந்து, குடிநுழைவுச் சட்டம் 1959/63 மற்றும் குடிநுழைவு விதிமுறைகள் 1963 இன் கீழ் குற்றம் செய்ததாக நம்பப்படும் அதேநேரம் கைது செய்யப்பட்ட பெண்கள் 21 முதல் 37 வயதுடையவர்கள் என்றும், ஒன்பது தாய்லாந்து நாட்டவர்களும் இரண்டு சீனப் பிரஜைகளும் அடங்குவதாக அவர் சொன்னார்.

விசாரணை மற்றும் மேலதிக நடவடிக்கைகளுக்காக அனைத்து வெளிநாட்டுப் பெண்களும் பேராக்கில் உள்ள ஈப்போ குடிநுழைவு டிப்போவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here