1.3 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள உறைந்த கோழி, இறைச்சி பறிமுதல்

செப்டம்பர் 17 முதல் 24 வரை சுமார் 1.3 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள உறைந்த இறைச்சி, கோழியை அனுமதியின்றி கொண்டு வருவதற்கான முயற்சியை மலேசிய எல்லைக் கட்டுப்பாடு, பாதுகாப்பு நிறுவனம் முறியடித்தது.

பாசீர் கூடாங் துறைமுகத்தில் தனித்தனி ஆய்வுகளின் போது மலேசிய தனிமைப்படுத்தல் மற்றும் ஆய்வு சேவைகள் (மாகிஸ்) இறக்குமதி அனுமதிகள் மற்றும் சுகாதார சான்றிதழ்கள் இல்லாத இறைச்சியைக் கொண்ட மூன்று கொள்கலன்கள் கைப்பற்றப்பட்டதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

செப்டம்பர் 17 அன்று பறிமுதல் செய்யப்பட்ட முதல் கொள்கலனில் அமெரிக்கா, போலந்து, வியட்நாமில் இருந்து 27,816 கிலோ உறைந்த பன்றி இறைச்சி இருந்தது. இதன் மதிப்பு 898,919 ரிங்கிட் என மதிப்பிடப்பட்டுள்ளது என  பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது.

செப்டம்பர் 18 மற்றும் செப்டம்பர் 24 ஆகிய தேதிகளில், தாய்லாந்தில் இருந்து முறையே 228,276 ரிங்கிட், 222,156 ரிங்கிட் மதிப்புள்ள 26,856 கிலோ, 26,136 கிலோ உறைந்த கோழியை ஏற்றிச் சென்ற கொள்கலன்களை நிறுவனம் பறிமுதல் செய்தது.

மக்கிஸ் இறக்குமதி அனுமதி இல்லாமல் எந்தவொரு விவசாயப் பொருளையும் இறக்குமதி செய்வது மலேசிய தனிமைப்படுத்தல் மற்றும் ஆய்வு சேவைகள் சட்டம் 2011 இன் பிரிவு 11(1) இன் கீழ் ஒரு குற்றமாகும், அதே சட்டத்தின் பிரிவு 11(3) இன் கீழ் தண்டனைக்குரியது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், குற்றவாளிகளுக்கு 100,000 ரிங்கிட் வரை அபராதம் அல்லது ஆறு ஆண்டுகளுக்கு மிகாமல் சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here