கோலாலம்பூர்:
தம்மை சம்பந்தப்படுத்திய காணொளி சர்ச்சை நிறைவு பெறாத வரையில் டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலிக்கு பெர்சத்து கட்சியின் முதன்மை தலைவராகும் தகுதி இல்லை என்று தாசேக் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் வான் சைப்பூல் வான் ஜான் கருத்துரைத்தார்.
முன்னதாக நானும் அஸ்மின் அலியின் ஆதரவாளராக தான் இருந்தேன். இன்னும் சொல்லப் போனால், அஸ்மின் கட்சியின் துணை தலைவராகவும் நான் எதிர்பார்த்தேன்.
ஆனால் அவரை தலைமை செயலாளராக கட்சி தலைவர் அறிவித்ததும் நான் அதனை ஏற்றுக் கொண்டேன்.
இருப்பினும் அஸ்மினை சம்பந்தப்படுத்திய காணொளி உண்மைதான் என்பது எனக்கு பிறகுதான் தெரிய வந்தது.
இது அஸ்மின் மீதான எனது நிலைப்பாட்டை மாற்றியது. மேலும் அரசியல் அநியாயங்கள் கண்டிப்பாக எதிர்க்கப்பட்டாலும் பெர்சத்துவில் ஒழுக்க சர்ச்சைகளை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அவர் திட்டவட்டமாக கூறினார்.



















