பெர்சத்து உட்கட்சி விவகாரம் பெரிக்காத்தானை பாதிக்காது – சனூசி கருத்து

அலோர் ஸ்டார்:

பெர்சத்துவின் உட்கட்சி பூசல் விவகாரம் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி கூடிய விரைவில் நடத்தப்படவிருக்கும் சபா மாநில தேர்தலை எதிகொள்வதை பாதிக்காது.
பெர்சத்துவில் கருத்து வேறுபாடு விவகாரம் எழுந்துள்ள போதிலும் அது பெரிக்காத்தானின் வியூகங்கள், ஏற்பாட்டு நடவடிக்கைகளுக்கு எவ்விதத்திலும் விளைவுகளை ஏற்படுத்தாது என்று அக்கூட்டணியின் தேர்தல் பிரிவு இயக்குனர் டத்தோஸ்ரீ முகமட் சனூசி முகமட் நோர் தெரிவித்தார்.

பெரிக்காத்தானில் பிரச்சனைகள் ஏதும் கிடையாது. பொதுவாக அரசியல் கட்சிகளில் கருத்து வேறுபாடுகள் எழுவது வழக்கம்தான். ஆனால் நேரம் வரும்போது அவர்கள் ஒன்றிணைவர். அதே சமயம் மற்ற கட்சிகளுக்குள் இன்னும் மோசமான அளவில் பிரச்சனைகள் உள்ளன.

மேலும் பெர்சத்து உட்கட்சி விவகாரத்தில் நான், பாஸ் கட்சி சம்பந்தப்பட முடியாது என கெடா மந்திரி பெசாருமான அவர் தெளிவுப்படுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here