புக்கிட் காஜாங் டோல் சாவடி விபத்து ; JPJ விசாரணை அறிக்கை தயார்

உலு சிலாங்கூர்”

புக்கிட் காஜாங் டோல் சாவடியில் 4 வாகனங்களை உட்படுத்திய விபத்து குறித்த விசாராணை அறிக்கையை சாலை போக்குவரத்து அமலாக்க இலாகா (ஜேபிஜே) தயார் செய்து விட்டது.

அதே சமயம் அந்த விபத்தில் சம்பந்தப்பட்ட லாரி நிறுவனம் மீது சோதனை – கணக்காய்வு அறிக்கை மறு ஆய்வும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது குறித்த விசாரணை அறிக்கை போக்குவரத்து அமைச்சரிடம் ஒப்படைக்கப்படும் என்று ஜேபிஜே அமலாக்க முதன்மை இயக்குனர் டத்தோ முகமட் கிஃப்ளி தெரிவித்தார்.

முன்னதாக சனிக்கிழமை காலை நிகழ்ந்த இந்த விபத்தில் 12 மாத ஆண் குழந்தை உயிரிழந்தது. மேலும் 8 பேர் காயமுற்றனர்.

இந்த விபத்தில் 3 டன் லாரி ஒன்று, பொதுப் பணி இலாகாவிற்கு சொந்தமான 4 சக்கர பெரு வாகனம் ஒன்று, 2 கார்கள் மோதிக் கொண்டன.
அந்த லாரி மற்ற வாகனங்களை மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here