அன்வார் பிரதமர்? முக்ரிஸ் துணைப்பிரதமர்?

துன் டாக்டர் மகாதீர் முகமது டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் சில தினங்களுக்கு முன்பு சந்தித்து பேசினர். இச்சந்திப்பு அரசியல் உலகில் அதிமுக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

 முன்னாள்  துணைப்பிரதமர் டத்தோஶ்ரீ டாக்டர் வான் அஸிஸா வான் இஸ்மாயில் உட்பட பிகேஆர் மற்றும் பெர்சத்து கட்சிகளின்  முக்கியத் தலைவர்கள் இதில் கலந்து  கொண்டனர்.

அரசியலில் அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்து இச்சந்திப்பில் விவாதிக்கப்பட்டது என்று நம்பப்படுகிறது. வரும் மே 18ஆம் தேதி கூடவிருக்கும் ஒருநாள் நாடாளுமன்ற மக்களவைக் கூட்டத்தில் பேச போவது என்ன என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகவும் தெரிகிறது.

பிரதமர் டான்ஶ்ரீ மொஹிடின் யாசின் தலைமையிலான பெர்சத்து கட்சி பலவீனம் அடைந்து வருகின்ற நிலையில் அத்தரப்பை மீண்டும் தங்களது தரப்பிற்கு கொண்டு வரும் முயற்சியிலும் இவர்கள் ஈடுபடக்கூடிய சாத்தியம் நிலவுகிறது.

துன் டாக்டர் மகாதீர் பெர்சத்து கட்சியின் தேர்ந்தெடுக்கப்பட்ட அவை தலைவராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆட்சி மாறுமாயின்  டத்தோஶ்ரீ அன்வார் பிரதமருமாகவும் டத்தோஶ்ரீ முக்ரிஸ் மகாதீர் துணை பிரதமராக பதவியேற்பதற்கு இச்சந்திப்பில் ஒப்புக் கொள்ளப்பட்டதாகவும் நம்பப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here