கோலாலம்பூர்: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 7) புத்ராஜெயாவில் மந்திரி பெசார், முதலமைச்சர்களின் 147ஆவது கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார்.
கூட்டாட்சி மற்றும் மாநில அரசாங்கங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான முயற்சிகள், குறிப்பாக கொள்கைகளை சீரமைப்பதிலும், வளர்ச்சி முயற்சிகளை கூட்டாக செயல்படுத்துவதிலும் இந்த சந்திப்பு கவனம் செலுத்தியதாக அன்வார் ஒரு பேஸ்புக் பதிவில் தெரிவித்தார்.
வகுக்கப்பட்ட அனைத்து முடிவுகளும் திட்டங்களும் மக்களுக்கு, குறிப்பாக தேவைப்படுபவர்களுக்கு நேரடி நன்மைகளைத் தரும் என்று நம்பப்படுகிறது என்று நிதியமைச்சராகவும் இருக்கும் அன்வார் கூறினார்.








