கோலாலம்பூர்:
2017ஆம் ஆண்டு 51.84 கிராம் ஹெரோயின் கடத்திய குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட மலேசியர் பன்னீர் செல்வம் பரந்தாமன், இன்று அதிகாலை 6 மணிக்கு சிங்கப்பூரில் தூக்கிலிடப்பட உள்ளதாக அவரது வழக்கறிஞர் என். சுரேந்திரன் உறுதிப்படுத்தினார்.
நேற்று சிங்கப்பூர் நீதிமன்றம் அவரது இறுதி மேன்முறையீட்டு மனுவை நிராகரித்தது. அதற்கு முன் மேல்முறையீடும், சிங்கை பிரதமருக்கும் செய்த கருணை மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டிருந்தது.
இதற்கிடையில், பன்னீரின் சகோதரி சங்கரி கூறுகையில், “என் சகோதரர் ஒரு போதைப்பொருள் கடத்துவதில் மூளையல்ல, வெறும் கூரியர்தான்” என வலியுறுத்தி, “அவரை வலுக்கட்டாயமாக பயன்படுத்திய உண்மையான போதைப்பொருள் கடத்தல் கும்பல்காரர்கள் இன்னும் மலேசியாவில் சுதந்திரமாக உள்ளனர்” என்று குற்றஞ்சாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.





















