அரசு ஊழியர்களுக்கு ஒரு முறை உதவித் தொகையாக 500 ரிங்கிட் : பிரதமர் அறிவிப்பு

பிரதமர் அன்வார் இப்ராஹிம், கிரேட் 56  மற்றும் அதற்குக் கீழே உள்ள அரசு ஊழியர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்டவர்கள் உட்பட்டவர்களுக்கு ஒரு முறை 500 ரிங்கிட் உதவித் தொகையை அறிவித்தார்.

மாதாந்திர ஓய்வூதியம் பெறும் முன்னாள் ராணுவ வீரர்கள், ஓய்வூதியம் பெறாதவர்கள் உட்பட அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் 250 ரிங்கிட் சிறப்பு உதவி வழங்கப்படும் என்று அவர் கூறினார். இந்த உதவி அடுத்த ஆண்டு மார்ச் மாத தொடக்கத்தில் ஹரிராயா போது சரியான நேரத்தில் விநியோகிக்கப்படும் என்று அன்வார் 2026 பட்ஜெட்டை தாக்கல் செய்து கூறினார்.

முன்னதாக, மருத்துவர்கள், செவிலியர்கள், ஆயுதப்படைகள், காவல்துறை, ஆசிரியர்கள், தீயணைப்பு வீரர்கள், சிறைத் துறை பணியாளர்களை தங்க வைக்கும் குடியிருப்புகள் உட்பட அரசு ஊழியர்களின் குடியிருப்புகளை கட்ட, பராமரிக்க  பழுதுபார்க்க அரசாங்கம் 2.2 பில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கும் என்று அன்வார் கூறினார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here