கால்வாயில் சறுக்கி விழுந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் காயம்

புக்கிட் மெர்தாஜாம்:

ஜாலான் குபாங் செமாங்கில் உள்ள கம்போங் பெத்தானியில் நேற்று மதியம் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர கால்வாயில் சறுக்கி விழுந்ததில் ஒருவர் காயமடைந்தார்.

மோட்டார் சைக்கிள் சாலையை விட்டு விலகி வடிகாலில் விழுந்ததில் 47 வயதுடைய ஆடவர் காயமடைந்ததாக, பினாங்கு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை செயல்பாட்டு துணை இயக்குநர் ஜான் சகுன் பிரான்சிஸ் கூறினார்.

தீயணைப்பு வீரர்கள் விரைவாக சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாகவும், “மீட்புப் படையினர் நிலைமையை விரைவாக மதிப்பிட்டு, காயமடைந்த ஓட்டுநரை மீட்டு, மருத்துவ பணியாளர்களிடம் ஒப்படைத்தனர்,” என்று அவர் நேற்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

மீட்புப் பணி மாலை 5.27 மணிக்கு நிறைவடைந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here