கர்ம வினைகளை தீர்க்கக் கூடியவர் என்றதும் நம் நினைவிற்கு வருபவர் சிவபெருமான்தான். சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றியவராகவே முருகப்பெருமான் திகழ்கிறார் என்பதால் சிவனின் அம்சமாகவே முருகப்பெருமான் கருதப்படுகிறார். அதனால் முருகப்பெருமானையும் நாம் வழிபாடு செய்யும்பொழுது முன் ஜென்ம பாவங்கள் நீங்குவதற்குரிய வழிகள் நமக்கு கிடைக்கும் என்றே கூறலாம்.அதிலும் ஒரு சில குறிப்பிட்ட நட்சத்திர நாட்களில் நாம் செய்யக்கூடிய வழிபாடும் அபிஷேகமும் விரைவிலேயே பாவங்களை நீக்கும் என்றும் கூறப்படுகிறது. அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த ஒரு நட்சத்திரமாக தான் பரணி நட்சத்திரம் திகழ்கிறது.
பரணி நட்சத்திரம் வரக்கூடிய நாளில் பரணி தீபத்தை ஏற்றி வைத்து வழிபாடு செய்பவர்களுக்கு அவர்களுடைய கஷ்டங்கள் அனைத்தும் தீரும் என்று கூறப்படுகிறது. பொதுவாக கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய பரணி தீபத்திற்கு தான் நாம் முக்கியத்துவம் கொடுப்போம். ஆனால் ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய பரணி நட்சத்திர நாளில் அருகில் இருக்கக்கூடிய சிவாலயத்திற்கு அல்லது முருகப்பெருமான் ஆலயத்திற்கு சென்று மாலை நேரத்தில் அதாவது ஆறு மணிக்கு ஒரு பெரிய அகல்விளக்கில் நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும்.
இந்த தீபமானது குறைந்தது அரை மணி நேரமாவது எரிய வேண்டும். இப்படி ஒவ்வொரு பரணி நட்சத்திர நாளிலும் நாம் தீபமேற்றி சிவபெருமானையோ அல்லது முருகப்பெருமானையோ வழிபாடு செய்யும்பொழுது நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய வறுமை அனைத்தும் படிப்படியாக விலகும் என்றே கூறலாம். மேலும் நம்முடைய உடலில் இருக்கக்கூடிய நோய்கள் அனைத்துமே தீரும் என்றும் கூறப்படுகிறது.
இதோடு மட்டுமல்லாமல் பரணி நட்சத்திர நாளில் நாம் அருகில் இருக்கக்கூடிய முருகன் ஆலயத்திற்கு சென்று முருகப் பெருமானுக்கு பாலபிஷேகம் செய்து வழிபாடு செய்வதன் மூலமும் நம்முடைய முன் ஜென்ம பாவங்கள் தீரும் என்று கூறப்படுகிறது. மேலும் பரணி நட்சத்திர நாளிலோ அல்லது வியாழக்கிழமையிலோ நாம் பிறருக்கு அன்னதானம் செய்வதன் மூலம் நம்முடைய வாழ்க்கையில் இருக்கக் கூடிய சுபகாரிய தடைகள் அனைத்தும் விலகும்.





















