ஒரு மனிதனின் செயல்பாட்டிற்கு முக்கியமானது மனநிறைவு சிந்தனை என்றால் அது மிகையாகாது. மனமும் சிந்தனையும் பாதிப்படையாமல் பாதுகாக்க ஹுலிங் மிக அவசியம் என்று உலகளவில் கூறப்பட்டு வருகிறது.
பிராணா வைலட் ஹீலிங் மையத்தின் ஏற்பாட்டில் ஹுலிங்கின் முக்கியத்துவம் அறிந்து அதற்கான பயிற்சி வழங்கப்பட்டு வருவதாக அதன் ஸ்தாபகர் முனைவர் டாக்டர் சிவ விக்ரமன் பழனி தெரிவித்தார்.
பயிற்சி பெறும் மாணவர்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற முயற்சியில் தொடக்கமே 10 பாடத்திட்டங்களைக் கொண்ட டிப்ளமோ கல்வி என்றார்.
இன்று தங்களின் கல்வியை முடித்த 101 பேர் பட்டம் பெற்றதை பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறது. மலேசியாவில் நடைபெறும் முதல் டிப்ளமோ பட்டமளிப்பு விழா இது. சிங்கப்பூர், இந்தியா ஆகிய நாடுகளில் பட்டமளிப்பு விழா நடைபெற்று வருகிறது என்றார்.










