செல்வாக்ஸ் (Selvax) திட்டத்தின் கீழ் பூஸ்டர் தடுப்பூசிகளை வழங்க தயாராகிறதா சிலாங்கூர்?

ஷா ஆலாம்: சிலாங்கூர் மாநில அரசாங்கம் தனது சிலாங்கூர் தடுப்பூசி திட்டத்தின் (Selvax) திட்டத்தின் கீழ் கோவிட் -19 தடுப்பூசியின் பூஸ்டர் டோஸை வழங்க தயாராகி வருவதாக மாநில சட்டசபைக்கு புதன்கிழமை (ஆகஸ்டு 25) தெரிவிக்கப்பட்டது.

மாநில பொது சுகாதாரம், ஒற்றுமை, பெண்கள் மற்றும் குடும்ப மேம்பாட்டுக் குழு தலைவர் டாக்டர் சித்தி மரியா மஹ்மூத் கூறுகையில், 18 வயது மற்றும் அதற்கும் குறைவான வயதுடையவர்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்கும் தயாராகி வருவதாகவும் அதற்கு கோவிட் -19 தடுப்பூசி வழங்கல் மற்றும் அணுகல் உத்தரவாத சிறப்பு குழுவால் (JKJAV) ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்றார்.

“செல்வாக்ஸ் கொமுனிட்டி” (Selvax Komuniti) மற்றும் “செல்வாக்ஸ் இண்டஸ்ட்ரி” (Selvax Industri) ஆகிய திட்டங்களைப் பற்றி தெரிந்து கொள்ள விரும்பிய வோங் சீவ் கி (PH-Balakong) யின் கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக அவர் இவ்வாறு கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

டாக்டர் சித்தி மரியா தொடர்ந்து கூறுகையில் ,ஆகஸ்ட் 22 வரை, செல்வாக்ஸ் கொமுனிட்டி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட தடுப்பூசி அளவுகளின் எண்ணிக்கை 224,880 டோஸ்கள் என்றும், 275,120 டோஸ் மீதமுள்ளது என்றும் கூறினார்.

மேலும் செல்வாக்ஸ் இண்டஸ்ட்ரிக்கு திட்டத்தின் கீழ் 142,719 டோஸ் தடுப்பூசி ஆகஸ்ட் 22 வரை வழங்கப்பட்டது என்றும் இத்திட்டத்தின் கீழ் 750,000 டோஸ் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.

இதற்கிடையில், செல்வாக்ஸ் தடுப்பூசி மையத்தின் (PPV) செயல்பாட்டை ரத்து செய்வது குறித்த தகவல்களை உடனடியாக அறிவிக்காததற்காக, அவர் எதிர்க்கட்சி உறுப்பினர்களிடம் மன்னிப்பு கேட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

– பெர்னாமா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here