கொலை செய்யப்பட்ட மாணவிக்கு பண்டார் உத்தமா பள்ளியில் பெற்றோர் மலர் அஞ்சலி

கோலாலம்பூர்:

பண்டார் உத்தமா பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 16 வயது மாணவி கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவத்தால் இன்னும் அப்பகுதியில் அதிர்ச்சி நிலவுகின்ற நிலையில், அந்தப் பள்ளியில் படிக்கும் ஒரு மாணவனின் தாய், இன்று அந்தப் பள்ளி வாசலில் வந்து, உயிரிழந்த மாணவிக்காக மலர் அஞ்சலி செலுத்தினார்.

அந்த தாய், பள்ளி நுழைவாயிலில் முன்பு வைக்கப்பட்டிருந்த மற்றொரு பூங்கொத்துக்கு அருகில் ஒரு புதிய பூங்கொத்து வைத்து அஞ்சலி செலுத்தினார்.

“என் மனநிம்மதிக்காக இதைச் செய்தேன்,”என்று கூறிய அவர், தன் பிள்ளையும் அதே பள்ளியில் படிப்பதாக தெரிவித்தார்.

இன்று வகுப்புகள் வழக்கம்போல் நடைபெற்றாலும், பள்ளிச் சூழல் அமைதியும் பதற்றமும் கலந்ததாக இருந்தது. ஊடகப் பிரதிநிதிகள் பள்ளி வளாகத்துக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here