அனைவரினதும் வாழ்விலும் தீப ஒளி ஒளிரட்டும்! மனித வள அமைச்சர் மாண்புமிகு ஸ்டீவன் சிம் சீ கியோங் இன் தீபவாளி வாழ்த்துகள்

அதி உயர் திறன்மிக்க இந்திய சமுதாயத்தை உருவாக்குவதே MISI-இன் இலக்கு – ஸ்டீவன் சிம்
வாய்ப்பு எனும் ஒரு புள்ளியை வைத்தே ஒவ்வொரு கனவும் நனவாகிறது. மலேசிய இந்தியர் திறன் திட்டத்தின் (MISI) வழி நாட்டில் உள்ள இந்திய சமுதாயத்திற்கு ஓர் அளப்பரிய வாய்ப்பினை வழங்குவதற்குரிய களமாகும். மலேசிய இந்தியர்களுக்கு உயர் திறன் பயிற்சிகளை அளித்து அதிக வருமானம் பெறும் வாய்ப்பை வழங்கி புதிய வாழ்க்கையைத் தொடங்குவதற்கு வழிகாட்டுகிறது.
MISI என்பது ஒரு திட்டம் மட்டுமல்ல. திறமை, அடைவு நிலை, கனவு ஆகியவற்றுக்கிடையிலான ஓர் இணைப்புப் பாலமாகும். கனவுகளை நனவாக்கும் ஓர் அற்புதத் திட்டமாகும்.

HRDCorp மேலும் TalentCorp, வழி இத்திட்டமானது திறன் பயிற்சி, வேலை வாய்ப்பு, தொழில் மேம்பாடு போன்றவற்றில் அதீத கவனம் செலுத்துகிறது.
MISI-இன் உண்மையான பலமானது எண்ணிலும் அடைவு நிலை அறிக்கையிலும் இல்லை. மாறாக, மனிதர்களின் வெற்றியில்தான் அதன் பலமே அமைந்திருக்கிறது.

இதுவே MISI -இன் உத்வேகமாகும். வேலைக்காக மட்டும் பயிற்சி அளிக்கப்படவில்லை. மாறாக, தங்களது பிரகாசமான எதிர்காலத்திற்கு ஒருவரின் நம்பிக்கையையும் கௌரவத்தையும் உயர்த்திப் பிடிப்பதற்கு வகை செய்கிறது.

அன்று கம்பத்து பிள்ளை; இன்று பன்னாட்டு நிறுவன பொறியியலாளர்
யுமிஸ்ட்ரா த/பெ விஸ்வலிங்கம் அன்று ஜாபில் போன்ற பெரு நிறுவனங்களின் பெயரை தொலைக்காட்சியில் மட்டுமே பார்த்தும் கேட்டும் இருக்கிறார். கூலிம் மண்ணின் பிள்ளையான இவர், மாதம் ஒன்றுக்கு 2,500 ரிங்கிட் வருமானம் பெறும் பி40 பிரிவு குடும்பத்தைச் சேர்ந்தவர். படிப்பு முடிந்ததும் வேலை தேடுவதில் சிக்கலையும் சிரமங்களையும் எதிர்கொண்டார். வேலை அனுபவமும் இல்லை. மேலும் நகரிலிருந்து மிக தூரத்தில் உள்ள ஓர் உள்பகுதியில் வாழ்கிறவர்.

இருப்பினும், மனிதவள அமைச்சின் (KESUMA) கீழ் செயல்படும். TalentCorp அமல்படுத்தியிருக்கும் MISI திட்டத்தில் பங்கேற்றார். அவரின் வாழ்க்கையும் முழுமையாக மாறியது.

சிப் தயாரிப்பு நிறுவனத்தில் பயிற்சி பெறுவதற்காக கூலிமில் இருந்து பினாங்கிற்கு ஒவ்வொரு நாளும் பஸ் ஏறி பயணம் செய்தார். இந்தத் தியாகங்கள் அனைத்தும் அவரின் வாழ்க்கையை முழுமையாக மாற்றி வெற்றிப் பாதையில் பயணிக்க வைத்திருக்கிறது.

இன்று யுமிஸ்ட்ரா Jabil Circuit இல் EIT QA Engineer ஆக பணிபுரிகிறார். அமெரிக்காவைச் சேர்ந்த மிக பிரபலமான இந்த பன்னாட்டு நிறுவனத்தில் அவர் இப்போது மாதம் ஒன்றுக்கு 3,550 ரிங்கிட் வருமானம் பெறுகிறார்.

இதுபோன்ற பெரு நிறுவனங்களில் வேலை செய்வதற்கு நமக்கு தகுதி இல்லை என்று நான் முன்பு நினைத்தேன். ஆனால், முயற்சி இருந்தால் எதுவுமே அசாத்தியம் இல்லை என்பதை தெளிவாகப் புரிந்துகொண்டேன் என்கிறார் யுமிஸ்ட்ரா.


என் முதல் மாதச் சம்பளம் என் அம்மாவுக்காக…
அப்பா விபத்துக்குள்ளான பிறகு அவரால் வேலை செய்ய முடியவில்லை. குடும்பப் பொறுப்பு பிரவின் ராஜ் த/பெ முரளிதரன் தோளில் ஏறியது. என் அம்மா மட்டுமே வேலை செய்தார். ஒவ்வொரு நாளும் அவர் களைத்துப் போய் வருவது மனதிற்கு பெரும்

வேதனையைத் தந்தது. எனக்குள் ஓர் உறுதிமொழியை எடுத்துக் கொண்டேன். என் தாயாருக்கு உதவி செய்ய வேண்டும் என்று நினைத்தேன் என்றார் அவர்.
ஓர் இளம் பட்டதாரியான பிரவின் பல மாதங்களாக வேலையின்றி இருந்தார். இருப்பினும் மனிதவள அமைச்சின் HRDCorp பயிற்சித் திட்டத்தில் பங்கேற்ற பின்னர் பிரவின் வாழ்க்கையில் அனைத்தும் மாறியது. தகவல் தொழில்நுட்பத் துறையில் Software Developer ஆக பயிற்சி பெற்றார்.

பயிற்சியை முடித்த சில தினங்களிலேயே DELL Global Business Centre Sdn. Bhd. நிறுவனத்தில் Software Engineer ஆக பணியில் அமர்ந்தார். இவரது மாதச் சம்பளம் 5,100 ரிங்கிட். எனக்கு வேலை கிடைத்ததும் என் அம்மாவிடம் தொலைபேசி வழி தகவல் தெரிவித்தேன். அவர் அழுதார். அது துயரக் கண்ணீர் அல்ல. ஆனந்தக் கண்ணீர் என்று பிரவின் குறிப்பிட்டார்.

பிரவின் இன்று தன் குடும்பத்தையே சுமந்திருக்கிறார். அதுமட்டுமன்றி வாய்ப்பும் பயிற்சியும் எவ்வாறு ஒருவரின் வாழ்க்கையை மாற்றும் என்பதற்கு அவர் மிகச் சிறந்த ஓர் உதாரணம்.

சாதிப்பதற்கு இயலாமை தடையல்ல!

சிறு வயது முதலே கவினாஷ் த/பெ ஸ்ரீமுருகன் நிசப்த உலகில் வாழ்ந்தார். பிறக்கும்போதே அவருக்கு காது கேட்கவில்லை. அவரைப் பொறுத்தவரை தொடர்பு என்பது மிக சிரமமானதாக இருந்தது. ஆனால், அந்த நிசப்தத்திற்குப் பின்னால் குரல் கொடுப்பதற்கு ஒரு வழியைக் கண்டுபிடித்தார். படங்கள், காணொலிகள் வழி அவர் பேசினார். புகைப்படம் எடுக்கும்போதும் அல்லது வீடியோவை எடிட் செய்யும்போதும் சுதந்திரக் காற்றை நான் சுவாசித்தேன் என்று ஒரு சிறு புன்னகை வழி தெரிவித்தார்.

என்னால் இசையைக் கேட்க முடியாது. ஆனால் படமாகப் பார்க்கும்போது அதனை என்னால் உணர முடியும் என்கிறார் அவர். கோவிட் கொடுந்தொற்றுக்குப் பிறகு தன்னுடைய நண்பர்கள் வேலை தேடிக் கொண்டிருந்தனர். ஆனால், கவினாஷ் MISI திட்டத்தில் ஏ.ஐ.உருவாக்கத்தில் புகைப்படம், விஷுவல் எடிட்டிங்கிலும் பயிற்சி பெற்றார். அதிநுட்பக் கருவிகளையும் தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தி ஓர் புதிய ஆக்கத்திறன் உருமாற்றத்தை அவர் கண்டார்.

இந்தப் பயிற்சியானது புகைப்படம், வீடியோவை எடிட் செய்வதில் ஏ.ஐ. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் திறனைப் பெற்றார். உடல் பேறு குறைந்திருந்தாலும் தன்னம்பிக்கையை அவர் கைவிடவில்லை. அந்தத் தன்னம்பிக்கையும் பயிற்சியும் புதிய பாதையில் அவரைப் பயணிக்க வைத்தது. இப்போது அவர் மிகுந்த நம்பிக்கையுடன் ஒரு சுதந்திரமிக்க இளைஞராகப் பயணிக்க முடிந்திருப்பதை மெல்லிய புன்னகையால் நமக்கு உணர்த்தினார். முதன்முறையாக தன்னுடைய இயலாமையை ஒரு தடையாக நினைக்காமல் அதுவே தனக்குள்ள சிறப்பு என்பதை உணர்ந்தார்.

திறனை உயர்த்திக் கொள்ளுங்கள்!

எதிர்காலத்தை கட்டி எழுப்பும்
பல்கலைக் கழகத்தில் தகவல் தொழில்நுட்பத் துறையில் பட்டப் படிப்பை முடித்த 24 வயது ரவித்ரா த/பெ ராஜா என்பவருக்கு எதிர்காலம் அவ்வளவு பிரகாசமாக இருக்கவில்லை. இரண்டு மாதங்கள் வேலை இல்லை. நான் படித்த படிப்புக்கு பொறுத்தமான வேலைக் கிடைக்குமா என்று ஒவ்வொரு நாளும் நினைத்துக் கொள்வேன் என்றார்.
மாதம் 2,000 ரிங்கிட் முதல் 4,000 ரிங்கிட் வரை சம்பாதிக்கும் பூச்சோங்கைச் சேர்ந்த பி40 குடும்பத்தின் பிள்ளையான இவர், உடனடியாக வேலையில் சேரவேண்டிய அழுத்தத்தில் இருந்தார்.

MISI பயிற்சியில் பங்கேற்றப் பின்னர் என்னுடைய எதிர்காலத்தை செதுக்கக்கூடிய பயிற்சியாக இருந்ததை உணர்ந்ததாகக் கூறும் ரவித்ரா, Knowledgecom ஏற்பாட்டில் நடைபெற்ற Microsoft Full Stack Developer பயிற்சியில் ரவித்ரா பங்கேற்றார். இப்போது அவர், பெஸ்டிநெட் சென்டிரியான் பெர்ஹாட் நிறுவனத்தில் மாதம் 4,700 ரிங்கிட் சம்பளம் பெறும் பணியில் Full Stack Developer ஆக வேலை செய்கிறார்.

ஓர் இளம் பட்டதாரி, மேலும் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு இது ஒரு மிகப்பெரிய சாதனையாகும். ஒரு சிறு தொடக்கம்தான் மிகப்பெரிய இலக்கிற்கு கொண்டு சேர்க்கிறது என்று ரவித்ரா கூறுகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here