ஆசியானின் புதிய உறுப்பினர் நாடாகிறது திமோர் லெஸ்டே –நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு

கோலாலம்பூர் :

ஆசியானின் அதிகாரப்பூர்வ உறுப்பினர் நாடாக திமோர் லெஸ்டே இணையும் வரலாற்றுச் சிறப்பு மிக்க தருணம் நெருங்கியுள்ளது.

தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பான (ASEAN) ஆசியானில் சேர்வதற்காக திமோர் லெஸ்டே சுமார் 14 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணப்பித்திருந்தது.

இந்நிலையில், இன்று சனிக்கிழமை (அக்டோபர் 25)  கோலாலம்பூரில் நடைபெறும் 47வது ஆசியான் உச்சிமாநாட்டில், திமோர் லெஸ்டேவை அதிகாரப்பூர்வ உறுப்பினராக இணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

அந்த செயல்முறையின் ஒரு பகுதியாக, திமோர் லெஸ்டே பிரதிநிதிகள் ஒரு முக்கிய ஆவணத்தில் கையெழுத்திட உள்ளனர். இதன் மூலம் தென்கிழக்காசியாவை அணு ஆயுதங்களும் பேரழிவு உண்டாக்கும் ஆயுதங்களும் இல்லாத வட்டாரமாக வைத்திருக்க நாடு உறுதிப்படுத்தும்.

திமோர் லெஸ்டே, நாளை ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 26) முதல் ஆசியானின் அதிகாரப்பூர்வ உறுப்பினராக அறிவிக்கப்படவுள்ளது.

இது அந்த நாட்டின் சர்வதேச தளத்தில் முக்கிய முன்னேற்றமாக கருதப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here