மலாக்கா:
மக்களிடையே ஒற்றுமை தொடர்ந்து வலுத்தப்பட்டு வந்தால், மற்ற நாடுகளை காட்டிலும் மலேசியாவால் இன்னும் வெற்றிகரமாக உலகத் தர நிகழ்ச்சிகளை நடத்த முடியும் என சுற்றுலாத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ தியோங் கிங் சிங் கருத்துரைத்தார்.
பெரிய அளவிலான நிகழ்ச்சிகளை ஏற்று நடத்தும் வல்லமை மலேசியா கொண்டிருப்பதை உறுதி செய்வதற்கு ஒன்றுப்பட்ட, ஒருவருக்கொர் உதவி செய்கின்ற மக்கள் பலம் அடித்தளமாக அமைகின்றது என்று 2025 சுற்றுலா மாநாட்டில் கலந்து கொண்ட அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
மேலும் அனைத்துலக சுற்றுலா தினம், அனைத்துலக சுற்றுலா மாநாடு ஆகியவை மிக முக்கியமான அனைத்துலக நிகழ்ச்சிகளாகும்.
இந்த நிகழ்ச்சிகளை நாம் முதல் முறையாக நடத்தியுள்ளோம். இதன் மூலம் நமது வல்லமை உலக அரங்கில் மிளிர்கின்றது என்றும் அமைச்சர் சொன்னார்.
இதனிடையே இந்த நிகழ்ச்சியில் மலாக்கா முதல்வர் டத்தோஸ்ரீ அப்துல் ரவூப் யூசோப், சுற்றுலா துறை சார்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.




















