கோலாலம்பூர்,
பேராக், பினாங்கு, கெடா ஆகிய 3 மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்துள்ளது.
நேற்று இரவு அந்த எண்ணிக்கை 4743 பேராக இருந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி 5806 பேராக உயர்வு கண்டுள்ளது.
பேராக்கில் லாருட் மாதாங் சிலாமாட், மஞ்சோங், கெரியான், மத்திய பேராக் ஆகிய பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று காலை 8 மணி நிலவரப்படி 2922 பேராக உயர்வு கண்டுள்ளது. இவர்கள் 993 குடும்பங்களை சேர்ந்தவர்கள் ஆவர்.
தற்போது பேராக்கில் மொத்தமாக 26 பேரிடர் தற்காலிக நிவாரண மையங்கள் இயங்குவதாக அம்மாநில பேரிடர் மேனான்மை செயற்குழு செயலகம் தெரிவித்துள்ளது.
அதே சமயம் பினாங்கில் இன்று காலை நிலவரப்படி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1026 பேராக உயர்ந்துள்ளது.
279 குடும்பங்களை சேர்ந்த அவர்கள் அனைவரும் 7 நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக வட செபராங் பிறையில் 4 மையங்கள், மத்திய செபராங் பிறையில் 2 மையங்கள், தீவு பகுதியில் ஒரு மையமும் இயங்குவதாக சமூக நல இலாகாவின் பேரிடர் தகவல் அகப் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் கெடாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று காலை நிலவரப்படி 1858 பேராக உயர்ந்துள்ளது.
அம்மாநிலத்தில் புதிதாக திறக்கப்பட்டுள்ள 6 மையங்களோடு சேர்த்து தற்போது மொத்தமாக 14 மையங்கள் இயங்குகின்றன.
அதிலும் கூலிம் மாவட்டத்தில்தா அதிகமானோர் அதாவது 1470 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 449 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என
அம்மாநில பேரிடர் மேளான்மை செயற்குழு செயலகம் கூறியுள்ளது.




















