
சிப்பாங்:
தலைநகரில் நடைபெறும் ஆசியான் உச்ச நிலை மாநாட்டிற்காக மலேசியா வந்துள்ள அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப் மகிழ்ச்சியாக காணப்பட்டார்.
இன்று காலை சிப்பாங் அனைத்துலக விமான நிலையத்தில் வந்திறங்கிய அவர், தம்மை வரவேற்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாரம்பரிய இசை படைப்பிற்கு (Kompang) ஏற்ப நடனமாட செய்தார்.
முன்னதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சுலைமான் நால்ட் டிரம்ப்பை அதிகாரப்பூர்வமாக வரவேற்றார்.
மேலும் அரச மலேசிய இராணுவப் படையினரின் அண்வகுப்பும் இந்த வரவேற்பில் இடம் பெற்றது.
அணிவகுப்பை கடக்கும்போது அவர் தமது ஒரு கையில் அமெரிக்க கொடியும் மற்றொரு கையில் மலேசிய கொடியும் ஏற்தியபடி வந்தார்.
அதோடு பிரதமர் டிரம்ப்புக்கு அங்கிருந்த சில அமைச்சரவை உறுப்பினர்களையும் அறிமுகம் செய்து வைத்தார்.
தொடர்ந்து இரு தலைவர்களும் பலத்த பாதுகாப்புட டிரம்ப்பின் அதிகாரப்பூர்வ வாகனத்தில் மாநாட்டு இடத்திற்கு புறப்பட்டனர்.




















